பொய் பேசி.. ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ரவீந்தர்.. பல கோடி சுருட்டல்? மன உளைச்சலில் மகாலட்சுமி
சென்னை; சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் செல்வசேகர் பல்வேறு பிரபலங்களை மோசடி செய்து இருக்கலாம் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் செல்வசேகர் தனியார் மீடியா நிறுவனம் ஒன்றிடம் 16 கோடி ரூபாய் வாங்கி உள்ளார். அரசு திட்டத்தின் கீழ் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி பணம் வாங்கி உள்ளார்.

இந்த திட்டத்தை தொடங்குவதற்கு 200 கோடி ரூபாய் தேவை. இது பலர் சேர்ந்து செய்யும் அரசுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டம். அதற்கு ஒரு கட்டமாக நீங்கள் 16 கோடி முதலீடு செய்யுங்கள் என்று கூறி பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு எந்த நிறுவனத்தையும் தொடங்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
அந்த மீடியா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதற்கும் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார் ரவீந்தர். நிறுவனம் இப்போது தொடங்க போகிறது, அப்போது தொடங்க போகிறது என்று கதை விட்டு உள்ளார். அவரை நம்பி சில காலம் அந்த நிறுவனம் பொறுத்திருந்து உள்ளது.
ஆனால் குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் அவர் எந்த நிறுவனத்தையும் தொடங்காமல் இவர் காலம் தாழ்த்தி வந்ததாலும் அவர் கோபம் அடைந்து வழக்கு தொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை தொடர்ந்து மீடியேட்டர்கள் மூலம் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் ரவீந்தர் காசோலைகளை வழங்கி இருக்கிறார். 4-5 காசோலைகளை அவர் கொடுத்துள்ளார். இந்த காசோலைகளை வங்கியில் கொடுத்த போது அவை அப்படியே பவுன்ஸ் ஆகி உள்ளது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இது தொடர்பாக அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இன்னொரு பக்கம் பணத்தை கேட்க ரவீந்தர் அதை கொடுக்க முடியாது என்று கூறியும் மறுத்துள்ளார். இதையடுத்து விசாரணையின் முடிவில் ரவீந்தர் கைது செய்யப்பட்டார். அதோடு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த ஜாமீன் மற்றும் மேல்முறையீடு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன . அவர் பணம் கொடுக்க கூடாது என்ற திட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பல பிரபலங்களை அவர் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக பல பிரபலங்களை இதே பாணியில் தேடி தேடி இவர் மோசடி செய்துள்ளார். இவருக்கு எதிராக ஏற்கனவே 3-4 வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது.

மகாலட்சுமி: இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக மகாலட்சுமி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக திருமணத்திற்கு முன் அவர் இந்த விவகாரம் எதையும் மகாலட்சுமியிடம் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. எதை பற்றியும் சொல்லாமல் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
ஏற்கனவே திருமணம் ஆன மகாலட்சுமி விவாகரத்து பெற்ற நிலையில் இரண்டாவதாக இவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில்தானம் ரவீந்தர் இப்படி பணமோசடி செய்தவர் என்று தெரிய வந்துள்ளது. புற அழகை தாண்டி மகாலட்சுமி அன்பிற்காக, காதலுக்காக திருமணம் செய்து கொண்டது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அப்படிப்பட்ட நிலையில் திருமணம் ஆகி சில மாதங்களில் ரவீந்தர் சிறைக்கு சென்று இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications