அசைவே இல்லை.. சுத்த மோசம்.. நடக்கக்கூட முடியாமல் சுருண்டு விழுந்த "வெங்கட்".. வண்டலூரில் என்னாச்சு?
வண்டலூரில் வரிக்கழுதைப்புலி தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டது
சென்னை: வரிக்கழுதைப்புலி உயிரிழந்ததையடுத்து, வண்டலூர் பூங்காவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.
இந்த பூங்காவை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். கொரோனா பரவல் சமயத்தில் இந்த பூங்காவையும் தொற்று விடவில்லை.. எத்தனையோ விலங்குகளுக்கு தொற்று பரவியது.. இதில் சிங்கம், புலிகள், இந்த 3 வருடத்தில் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.. இதற்கு பிறகு, பூங்கா இழுத்து மூடப்பட்டு, அதன்பிறகு தீவிர தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது..
பூங்காவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.. அதற்கு பிறகுதான் தொற்று குறைந்ததும் பூங்கா திறப்பு குறித்த அறிவிப்புகள் வெளியானது.. இந்த உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வன விலங்குகள் வனச்சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.... அந்தவகையில், வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகம், நீர்நாய், என ஏராளமான பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன...

சிசிடிவி கேமராக்கள்
இந்த உயிரினங்களை கண்ணும் கருத்துமாக கண்காணிக்கவே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.. இதைதவிர, கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.. எனினும், தற்போது புது புது வைரஸ்கள் பரவி வரும் நிலையில், எந்த ஒரு விலங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அது அடுத்தடுத்து மற்ற விலங்குகளுக்கும் பரவிவிடுவதால், மருத்துவர் குழு ஒன்று இதற்காகவே தயார் நிலையில் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பலி
இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதான ஆண் வரிக்கழுதைப்புலிக்கு திடீரென உடம்பு சரியில்லை.. அந்த வரிக்கழுதைப்புலிக்கு பெயர் வெங்கட்.. கடந்த 2 மாத காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது... பூங்கா கால்நடை டாக்டர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர்... ஆனாலும், வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் வரிக்கழுதைப்புலி பார்க்கவே சோர்வாக காணப்பட்டுது.. நிலைமை மோசமாகிவிட்டது.. அசைவுகூட இல்லை.. இறுதியில், பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.. இறந்த வரிக்கழுதைப்புலியின் உடலை பூங்கா டாக்டர்கள் போஸ்ட் மார்ட்டம் செய்தனர்.

செக்யூரிட்டிகள் - விடுமுறை
பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள நவீன எரியூட்டு மையத்தில் தகனம் செய்தனர்.. உடல் நலக்குறைவால் வரிக்கழுதைப்புலி உயிரிழந்ததை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் ஏற்படாதவாறு பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகிறது... அதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது... அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

சோகம்
இதுகுறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. இன்று ஒருநாள் விடுமுறைக்கு பதிலாக வருகிற 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும் என்றும் இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.. வரிக்கழுதைப்புலி மறைவால், வண்டலூர் பூங்காவில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகி உள்ளன.












Click it and Unblock the Notifications