ஒருத்தரிடமும் கேட்காத ஸ்டாலின்.. சுயமாக ரெடி செய்யப்பட்ட லிஸ்ட்..தூக்கி அடிக்கப்பட்ட தலைகள்..போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பான முடிவு எடுப்பதில் முதல்வர் ஸ்டாலின் வித்தியாசமான முறையை கையாண்டு உள்ளாராம்.

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

MK Stalin

மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஸ்டாலின் முடிவு: இந்த விவகாரத்தில் ஸ்டாலின் சுயமாக முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது இவர்களை தேர்வு செய்ய ஸ்டாலின் யாரிடமும் ஆலோசனை செய்யவில்லை. அவராகவே தேர்வு செய்தவர்கள்தான் இவர்கள் எல்லோரும். இவர்களை கைப்பட டிக் அடித்து ஸ்டாலின் பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படி இதுவரை தமிழக அரசியலில் பொதுவாக நடக்காத விஷயம் இன்று அதிகாரிகள் மாற்றத்தில் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் மாற்றம் தேவை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல காவல்துறையில் பணியாற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் என பல்வேறு நிலைகளிலும் இடமாற்றம் நடந்தது. தேர்தல் ஆணையம் இந்த ட்ரான்ஸ்ஃபரை செய்திருந்தது. தேர்தல் முடிந்து நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டது.

பொதுவாக, நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதும், தேர்தல் பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், மீண்டும் பழைய இடங்களுக்கே மாறுதல் செய்யப்படும் அல்லது அவர்கள் விரும்பும் பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கு காவல் துறை அதிகாரிகள் தமிழக டிஜிபியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த வகையில், தங்களுக்கு தோதான இடங்களுக்கு இடமாறுதல் கேட்டு டி.எஸ்.பி.க்கள்., இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் டிஜிபியிடம் கோரிக்கை கடிதம் கொடுத்துள்ளனர். கடிதம் கொடுக்கப்பட்டு 1 மாதமாகியும் அவர்களுக்கு புதிய இடங்களில் போஸ்டிங் போடப்படவில்லை.

காரணம், போஸ்டிங்கிற்கு அப்ரூவல் தரவேண்டிய காவல்துறை போர்ட் கூடி முடிவெடுக்கவில்லையாம். அதாவது, இது போன்ற இடமாறுதல்களுக்கு ஒப்புதல் தருவதற்காக டி.ஜி.பி.,, அடிசனல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு ), அடிசனல் டி.ஜி.பி. ( நிர்வாகம்) ஆகிய மூன்று உயரதிகாரிகள் கொண்ட கமிட்டி இருக்கிறது. இந்த கமிட்டி கூடி ஆலோசித்து, காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அதற்கேற்ப இடமாறுதல்களை செய்வதற்கு அப்ரூவல் அளிப்பர். இந்த அப்ரூவல் இன்னும் கிடைக்கவில்லையாம். அதனாலே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த காவல்நிலைய அதிகாரிகளுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. இதனால், தொலை தூரத்தில் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற புலம்பல்கள் காவல்துறையில் அதிகம் கேட்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+