அவசர அவசரமாக 3000 பக்கம்.. அமலாக்கத்துறையின் அசுர வேகம்.. செந்தில் பாலாஜிக்கு ஷாக்.. எப்படி நடந்தது?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை தொடர்பாக 3000 பக்க குற்றப்பத்திரிக்கையை ஒரே வாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த வேகம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு வடமாநிலங்களில் எதிர்கட்சிகளை முடக்க அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை பாஜக பயன்படுத்துவதாக ஒரு புகார் உள்ளது. முக்கியமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க, ஆபரேஷன் கமலாவை மேற்கொள்ள பாஜக இந்த மத்திய விசாரணை ஆணையங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சியினர் புகார் வைத்து வருகின்றனர்.

கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழவும் இதுவே காரணமாக எதிர்கட்சிகளால் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பக்கம் அமலாக்கத்துறை, சிபிஐ இரண்டும் தங்கள் பார்வையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
செந்தில் பாலாஜி: இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து அவரை சமீபத்தில் கஸ்டடியில் எடுத்தனர். 5 நாட்கள் விசாரணை செய்துவிட்டு நேற்று முதல்நாள் இரவு செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த 5 நாள் விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை 3000 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தும் முன்பே இந்த குற்றப்பத்திரிகையில் ஒரு பாதி தயார் செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள். அதாவது ரெய்டின் போதே ஒரு பாதி அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்டது. அதன்பின் ரெய்டு முடிந்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருந்த போது இதேபோல் குற்றப்பத்திரிகையில் இன்னொரு கட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்துதான் அவரிடம் நடத்தப்பட்ட 5 நாள் விசாரணையின் அறிக்கை, விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்வி , பதில்கள் ஆகியவை கோர்ட்டில் எழுதப்பட்டு அவையும் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவை எல்லாம் சேர்த்துதான் 3000 - 4000 பக்கங்கள் வரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு உள்ளது.
விசாரணை பின்னணி: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்.
இதன் அடிப்படையில் கைதான அவரிடம்.. அது தொடர்பாகவே கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறதாம். போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படுவது தொடர்பாகவே அவரிடம் விசாரணை செய்யப்பட்டு உள்ளதாம்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications