ஒரே டிராக்கில் 2 ரயில்கள்.. கவரப்பேட்டை விபத்து எப்படி நடந்தது? பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி பதில்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி விளக்கம் அளித்தார். டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்த பிறகும் இது போன்ற விபத்துகள் நடப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், ஒரே டிராக்கில் 2 ரயில்கள் சென்றது எப்படி என்பது குறித்தும் செய்தியாளர்களின் கேள்விக்கு அமர்பிரசாத் ரெட்டி பதில் அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ளது கவரப்பேட்டை ரயில் நிலையம். இது சென்னை சென்ட்ரல் - விஜயவாடா ரயில்வே மெயின் லைனில் அமைந்துள்ள மிகச்சிறிய ரயில் நிலையம் ஆகும். இங்கு மின்சார ரயில்கள் மட்டுமே நின்று செல்லும். இங்கு நேற்ற இரவு சுமார் 8.30 மணியளவில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் பின்பிறமாக பயங்கரமாக மோதியுள்ளது. இதில் 13 பெட்டிகள் தடம்புரண்டது. ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. பயணிகள் விரைவு ரயிலின் 4 ஏசி பெட்டிகள் தடம் புரண்டது.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தில் 19 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.. இந்த விபத்து குறித்து அறிந்து விரைந்து சென்ற பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி, மீட்பு பணிகளுக்கு உதவினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், இது மிகவும் வேதனையான ஒரு சம்பவம், கவரப்பேட்டையில், நாம் இருக்கிறோம். இது கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா பார்டரில் உள்ள தமிழக பகுதியாகும். இந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது சென்னையில் இருந்து பயணிகள் ரயில் ஒன்று மோதியது. இந்த விபத்தை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இதில் அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை..
இவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும், ஆண்டவன் அருளால் எந்த ஒரு உயிர்சேதமும் நடந்ததாக ரிப்போர்ட்டுமே இல்லை.. சிலர் காயம் அடைந்துள்ளார்கள்.. அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.. பயணிகளுக்கு தேவையான வசதியை ரயில்வே அதிகாரிகள் கொடுத்துள்ளார்கள்.. தமிழக அரசு அதிகாரிகளும் கொடுத்துள்ளார்கள்.. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாஜகவினர் அனைவருமே இங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள், காவல்துறை என எல்லாருமே இணைந்து அனைவரையும் மீட்டார்கள்" என்றார்.
அப்போது டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்த பிறகும் இது போன்ற விபத்துகள் நடப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமர்பிரசாத் ரெட்டி, இந்த நேரத்தில் டெக்னிக்கலாக பேசவிரும்பவில்லை.. சூப்பர் பவர் நாடுகளில் கூட விபத்து ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கூட விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய விபத்திற்கு நடுவே, சின்ன உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயம்.. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது என்றார். வடமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் நியமிக்கப்படுவதால் கம்யூனிகேசன் பிரச்சனை வருவதாகவும், வடமாநில தொழிலாளர்கள் கவனக்குறைவாக செயல்படுவதாகவும் செய்தியாளர் ஒருவர் குற்றம்சாட்டினார். மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் தான் கவரப்பேட்டையில் ஸ்டேசன் மாஸ்டர் என்றும் கூறினார். இதனை மறுத்த அமர்பிரசாத் ரெட்டி, வடக்கு தெற்கு என்று பிரித்து பார்க்க வேண்டாம். வேண்டுமென்று யாரும் செயல்படமாட்டார்கள் என்று பதில் அளித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications