Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீவலப்பேரி பாண்டி..வெங்கடேச பண்ணையார்..வீரப்பன்! 100ஐ நெருங்கிய என்கவுண்டர்கள்! தொடங்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் இன்று காவல்துறையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் பிரபல ரௌடியான சீசிங் ராஜா. தமிழகத்தில் என்கவுண்டர்கள் புதிது இல்லை என்றாலும் அது எப்படி தொடங்கியது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகிறது. என்கவுண்டர் என்றால் என்ன? தமிழகத்தில் என்கவுண்டர் வரலாறு எப்படி தொடங்கியது? என்கவுண்டரில் பலியான முக்கிய புள்ளிகள் யார்? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..

30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான சீசிங் ராஜா நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காண்பிக்க சொன்ன போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறையினை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

encounter police crime

இரு குண்டுகள் காவல்துறை வாகனம் மீது பட்ட நிலையில் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் சீசிங் ராஜா பலியானதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை, வேறு வழக்கில் கைது செய்ய சென்றபோது தாக்குதல் நடத்தியதால் சீசிங் ராஜா தற்காப்புக்காக போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்கின்றனர்.

தமிழகத்தில் என்கவுண்டர் கலாச்சாரம் எப்படி தொடங்கியது என பார்க்கும்போது 1960 தொடங்கி 70 வரையிலான காலகட்டங்களில் பல்வேறு துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. அப்போது தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகரித்து இருக்கிறது. அப்போது வால்டர் தேவாரம் நக்சலைட்களை ஆதிக்கத்தை குறைக்க என்கவுண்டரை கையில் எடுத்தார் என்கிறார்கள்.

அதே நேரத்தில் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய செல்லும்போது அவர்கள் தாக்குதல் நடத்தினால் தற்காப்புக்காக வேறு வழியின்றி நடத்தப்படும் என்கவுண்டர்கள் கொலையாகாது என்கின்றனர். அதே நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசார் வழியில் நிறுத்தி அவர்களை சுட்டு கொலை செய்துவிட்டு என்கவுண்டர் நடத்துவதாக நாடகமாடுவதாகவும் ஒரு பக்கம் மனித உரிமை ஆர்வலர்கள் புகார் சொல்கின்றனர். நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் சீசிங் ராஜா என்கவுண்டர் வரை கிட்டத்தட்ட 100 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.

1980 தொடங்கி 2024 வரை பல என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்று இருக்கும் நிலையில் தலைநகரான சென்னையில் மட்டும் 25 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தமிழகத்தில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பிறகு ரவுடிகளை கட்டுப்படுத்த என்கவுண்டர் என்ற ஆயுதத்தை போலீசார் கையில் எடுத்திருக்கின்றனர். அந்த வகையில் அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டது ஒரு நக்சலைட் தான்.

1979ஆம் ஆண்டு ஒகேனக்கலில் அப்பு என்ற நக்சலைட்டும், 1980ல் பாலன் என்ற நக்சலைட்டும் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து 1980ல் திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் அருகே நக்சலைட் நாகராஜன், போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்.

அதற்கு பிறகு தமிழகத்தை உலுக்கிய என்கவுண்டர் சம்பவமாக 1984ல் சீவலப்பேரி பாண்டி என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றது. 1996 ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரி பகுதியில் ஆசைத்தம்பி என்ற ரவுடியும், அவனது கூட்டாளிகள் குணா, மனோ ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 1996 ஆம் ஆண்டு ஜிம் பாடி கபிலன், 1998 இல் ஹேண்ட் பாம்ப் மோகன், 1999இல் மிலிட்டரி குமார், 2022 ல் சஞ்சய் காட்டியா முருகேசன், காக்கா ரமேஷ், சுறா என்கிற சுரேஷ், ஸ்டாலின் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெங்களூரில் தீவிரவாதி இமாம் அலி உள்ளிட்ட ஐந்து பேர் தமிழக காவல்துறையினரின் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். அதற்கு அடுத்ததாக 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தென் மாவட்டங்களில் பிரபலமாக வலம் வந்த வெங்கடேச பண்ணையார் சுட்டு கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் அயோத்தி குப்பம் வீரமணியும் போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இடையானார்.

2005 ஆம் ஆண்டில் ரமேஷ் மணிகண்டன், 2006 இல் கன்னியாகுமரி உருண்டை ராஜன், அதே ஆண்டு ஜூன் ஏழாம் தேதி சென்னை நாகூரான், ஆகஸ்ட் மாதத்தில் திருப்போரூர் செந்தில்குமார், அக்டோபர் இரண்டில் முட்டை ரவி. நவம்பர் 18ல் காஞ்சிபுரம் மொர கிருஷ்ணன், டிசம்பர் மாதத்தில் பங்கு குமார் என்ற கொத்தவள் சாவடி குமார் ஆகியோர் ஒரே ஆண்டில் என்கவுண்டரில் பலியாகினர்.

2007 ஆம் ஆண்டில் பிப்ரவரியில் மயிலாடுதுறையில் மணல்மேடு சங்கர், ஆகஸ்டு ஒன்றாம் தேதி ஓசூர் அருகே வெள்ளை ரவி மற்றும் அவனது கூட்டாளியான குணா, 2008 பிப்ரவரி மாதத்தில் தஞ்சாவூர் மிதுன் சக்கரவர்த்தி, ஏப்ரல் மாதத்தில் தூத்துக்குடி ஜெயக்குமார், ஏப்ரல் 19ஆம் தேதி கொடைக்கானல் நவீன் பிரசாத், 2008இல் தஞ்சாவூர் பாம் பாலாஜி,, 2008 ஜூலை மாதத்தில் காசிமேடு பாபா சுரேஷ், நவம்பர் 16ஆம் தேதி சேலம் கோபி ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

2009 ஜனவரி மாதத்தில் திண்டுக்கல் தேவேந்திரன், பிப்ரவரியில் சிவகங்கை சண்முகம், ஜூலை மாதத்தில் சென்னை தனசேகரன், ஜூன் மாதத்தில் விருதுநகர் சுந்தரமூர்த்தி, அக்டோபர் மாதத்தில் குரங்கு செந்தில், ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.

2010 ஆம் ஆண்டும் ரவுடிகளுக்கு பயம் நிறைந்த ஆண்டாகவே இருந்திருக்கிறது. அந்த ஆண்டில் மட்டும் 2010ல் மயிலம் அசோக்குமார், திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு, கல் மண்டையன் என்கிற முருகன், கவியரசு, காஞ்சிபுரத்தில் கொற நடராஜன், ஏப்ரல் மாதத்தில் சாத்தூர் குமார், கோவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட மோகன்ராஜ் என்ற டிரைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

2012 ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த ஐந்து கொள்ளையர்கள் சென்னை வேளச்சேரியில் வைத்து என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். 2015 ஆம் ஆண்டு பத்தமடையில் ரவுடியான கிட்டப்பா, 2017 ஜனவரி மாதத்தில் சிவகங்கை சேர்ந்த ரவுடி கார்த்திகை செல்வன், 2017 ஏப்ரல் மாதத்தில் ராமநாதபுரம் கோவிந்தன், 2018 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி மதுரை முத்து, இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தரமணியில் ராயப்பேட்டை ரவுடி ஆனந்தன், 2019 மே இரண்டாம் தேதி சேலம் காரிப்பட்டி பகுதியில் ரவுடி கதிர்வேல், சென்னை மாதவரம் பகுதியில் 2019 ஜூன் மாதம் ரவுடி வல்லரசு, 2019 செப்டம்பர் 24, சென்னை கொரட்டூர் ரவுடி மணிகண்டன் ஆகியோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

2020 ஆம் ஆண்டு சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான சங்கர், கடலூரை சேர்ந்த கிருஷ்ணன், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முர்தசா ஆகியோர் 2021 ஆம் ஆண்டு போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

2022 இல் செங்கல்பட்டைச் சேர்ந்த சேர்ந்த தினேஷ், மொய்தீன் மற்றும் நெல்லையில் நீராவி முருகன், 2023ல் சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சோட்டா வினோத், ரமேஷ், திருச்சியைச் சேர்ந்த பில்லா ஜெகன் ஆகியோர் காவல் துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.

2024 ஆம் ஆண்டில் திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடியான துரைசாமி புதுக்கோட்டையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடமும், காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்படி பல சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் தமிழக காவல்துறை என்கவுண்டர் பட்டியலில் 2004 அக்டோபர் 18ஆம் தேதி சந்தன கடத்த வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளான சேர்த்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேது மணி ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த என்கவுண்டரில் பங்கு கொண்டவர்கள் மட்டுமல்லாது, வீரப்பனை பிடிக்கும் தனிப்படையில் இடம்பெற்ற அனைத்து காவலர்களுக்கும், பணப்பரிசு, நிலம், வீடு உள்ளிட்டவையும் தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+