போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்! செம ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய சிவசங்கர்.. பஸ்கள் இயங்குவது எப்படி?
சென்னை: தமிழ்நாடு முழுக்க பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தும் நிலையில் அதை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கையில் எடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டங்களை செய்கின்றன. பல்வேறு போக்குவரத்து சங்கங்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த ஜன. 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. வேலை நிறுத்த போராட்டத்தை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்தி வருகிறது. அதிமுக ஆதரவு இயக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு AITUC, CITU உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு வழங்க ஒருமனதாக முடிவு செய்துள்ளன. ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி, 7 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கி இருந்த நிலையில்தான் ஸ்டிரைக் நடத்தி வருகின்றன.
பிளான்: பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தும் நிலையில் அதை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கையில் எடுத்துள்ளார்.
அதன்படி இந்த போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்களை அமைச்சர் சிவசங்கர் முதலில் ஒருங்கிணைத்தார். உதாரணமாக தமிழ்நாட்டில் நடைபெறும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்கம் பங்கேற்காது என முதன்மை பொதுச்செயலாளர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது திமுக ஆதரவு தொழிற்சங்கம் ஆகும்.
இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில் 80 சதவிகிதம் வரை பேருந்துகள் இயங்குகின்றன.
இரண்டாவதாக, தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை. சென்னையில் மாநகர பேருந்துகள் வழக்கத்தை விட கூடுதலாக 103% இயக்கம். மாநிலம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துகழக பேருந்துகள் 100% இயக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 9,764 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதாவது 100.62 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மூன்றாவது இப்படி வேறு சங்கங்கள் இயக்கம் பேருந்துகளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மறித்து நேற்று போராட்டம் செய்ய முயன்றனர். இதை உணர்ந்து அமைச்சர் சிவசங்கர், பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள். பணிமனைகள், பேருந்து நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.
இது போக கடைசியாக தனியார் நிறுவன டிரைவர், ஆம்னி பேருந்து டிரைவர்கள் ஆகியோரை வைத்து பேருந்துகளை இயக்கம் பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக பொங்கலுக்கு பணிக்கு வர வேண்டி இருப்பதால் இந்த வாரம் லீவ் எடுத்த ஊழியர்களை இப்போதே வர வைத்து ஓவர் டைம் பார்க்க வைக்கும் முடிவையும் எடுத்துள்ளனர்.
போராட்டம் செய்வது சரி தவறு.. அரசு பக்கம் சரி தவறு என்பதை தாண்டி பொங்கல் நேரத்தில்.. மக்கள் அவதிப்பட கூடாது என்பதற்காக அமைச்சர் சிவசங்கர் ஸ்மாட்டாக் பிளான் போட்டோ 100.6 சதவிகித பேருந்துகள் இயங்குவதை உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications