பொன்முடிக்கு போகாத அழைப்பு.. ஆளுநர் மூவ்! 48 மணி நேரம்தான்.. பட்டென முடித்த முதல்வர்! நடந்தது என்ன?
சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கலுக்கு பின் என்ன நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.
நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் முக்கியமான மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி ஆளுநர் மூலம் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படும் அதிகாரம் நீக்கப்பட்டு, மாநில அரசே துணை வேந்தர்களை நியமனம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று அதிமுக, பாஜக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில், மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் ரவி கூட்டம்
சரியாக ஆளுநர் ஆர். என் ரவி ஊட்டியில் துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்த போதுதான் இந்த சட்டம் இயற்றப்பட்டது. அங்கு துணை வேந்தர்களுடன் அவர் பேசிக்கொண்டு இருந்த போதுதான் ஆளுநர்கள் துணை வேந்தரை நியமனம் செய்யும் அதிகாரத்தை பறித்து தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றியது. ஆளுநர் ரவி துணை வேந்தர்களுடன் 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். ஊட்டியில் நடக்கும் இந்த மாநாடு இன்று முடிவடைகிறது.

செல்லவில்லை
தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர்தான். இதனால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஆனால் இணை வேந்தர் என்ற பதவியை வகிப்பவர் உயர் கல்வித்துறை அமைச்சர். அமைச்சர் பொன்முடிதான் தற்போது பல்கலைக்கழக இணை வேந்தர். அவருக்கு இந்த மாநாட்டிற்கு அழைப்பு சென்று இருக்க வேண்டும். ஆனால் இந்த மாநாட்டிற்கான அழைப்பு பொன்முடிக்கு செல்லவில்லை என்றே ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேகமாக உருவாக்கப்பட்ட மசோதா
இணை வேந்தர் என்ற முறையில் பொன்முடிக்கு அழைப்பு சென்று இருக்க வேண்டும். ஆனால் செல்லவில்லை என்று ஆளும் தரப்பு தலைகள் கொதிப்புடன் தெரிவிக்கின்றன. ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அவர் வேந்தராக இருப்பது ஒன்று அரசியலமைப்பு அதிகாரம் இல்லை. அது மாநில அரசு கொடுத்த அதிகாரம். அதை நீக்கவும் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்பதை அவர் மறக்க கூடாது என்று திமுக தலைகள் கொதிப்புடன் தெரிவிக்கின்றனர்.

ஆனால் முன்பே திட்டம்
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவிக்கு எதிராக, அவரின் அதிகாரத்தை நீக்கும் வகையில் துணை வேந்தர் நியமன மசோதா வேகமாக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது ஆளுநர் ரவி இப்படி மாநாடு ஒன்றை நடத்த போகிறார் என்ற தகவல் அரசு தரப்பிற்கு சென்ற 48 மணி நேரத்தில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். வேகமாக மசோதா உருவாக்கப்பட்டு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முன்பே தமிழ்நாடு அரசு இந்த மசோதாவிற்கான சட்ட திட்டங்களை ஆராய்ந்துவிட்டதாம்.
Recommended Video

இதுதான் சரியாக இருக்கும்
கடந்த ஜனவரி 6ம் தேதியே இப்படி ஒரு மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வோம் என்று முதல்வரும், அமைச்சர் பொன்முடியும் தெரிவித்துவிட்டனர். அதன்படியே மசோதாவை உருவாக்கும் பணிகள் நடந்து வந்தன. சரியாக நேற்று நேரம் பார்த்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. ஆளுநரின் ஊட்டி மூவிற்கு அதே நாளில் முடிவு கட்டும் விதமாக.. ஆளுநருக்கு எதிர்ப்பு மெசேஜ் அளிக்கும் விதமாக நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது என்கிறார்கள் ஆளும் தரப்பு வட்டாரத்தினர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications