சென்னையில் 75 வயது தாத்தான்னு கூட பார்க்கல.. பக்கத்து வீட்டு சுகன்யா.. போட்ட பக்கா ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை கொரட்டூரை அடுத்த செந்தில்நகரை சேர்ந்த 75 வயது முதியவர் பாலசுந்தரம் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். முதியவர் பாலசுந்தரம் கடந்த 7ம் தேதி தனது வீட்டிற்கு வெளியே நின்றிருந்த போது, 3 பவுன் தங்க சங்கிலியை பர்தா அணிந்த நபர் ஒருவர் பறித்து சென்றார். இது பற்றி விசாரித்த போது, பக்கத்து வீட்டு சுகன்யா தான் இந்த செயலை செய்தார் என்பது தெரியவந்தது.. ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தங்கத்தின் மதிப்பு தாறுமாறாக ஏறிவிட்டது.இன்றைக்கு ஒரு பவுன் தங்கம் 64 ஆயிரத்தை தொட்டுவிட்டது.செய்கூலி சேதாரம். ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து பார்த்தால் ஒரு பவுன் தங்க நகை வாங்க 70 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியதிருக்கும். 2020ல் 35 ஆயிரம் இருந்தாலே, தங்க நகையை வாங்கி விட முடியும் என்கிற நிலை இருந்தது.இப்போது வெறும் ஐந்து வருடத்தில் அப்படியே இரண்டு மடங்கு ஏறிவிட்டது. ஏன் கடந்த 2024 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது கிட்டத்தட்ட 13 ஆயிரம் வரை தங்கத்தின் விலை ஏறிவிட்டது.

தங்கநகை விலை ஏறுவதால், தங்கத்திற்கு செய்கூலி சேதாரத்தின் மதிப்பும், ஜிஎஸ்டி தொகையும் அதற்கு தகுந்தாற் போல் அதிகமாகவே இருக்கிறது. அதன் காரணமாக சாமானியர்கள் தங்கம் வாங்குவது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவருகிறது. அதேநேரம் தங்க நகைகளை திருடுபவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

தங்கத்தை பாதுகாக்க லாக்கர், சிசிடிவி கேமரா என என்னதான் வைத்தாலும், திருடுபவர்களும் திருடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் பெண் அதிக தங்க நகை அணிந்திருந்தால், அதை திருடவும் சிலர் தயங்குவது இல்லை.. இதுவரை திருட்டு பின்புலமே இல்லாதவர்கள் கூட தங்க நகையின் மீது சபலப்பட்டு திருடுகிறார்கள். அப்படி திருடியவர் தான் சுகன்யா.. அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.

Chennai gold jewellery

சென்னை கொரட்டூரை அடுத்த செந்தில் நகரை சேர்ந்த 75 வயதாகும் பாலசுந்தரம் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். பாலசுந்தரம் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டு வெளியே நின்று இருந்தார். அவர் தனது கழுத்தில் 3 பவுன் தங்க சங்கிலி அணிந்திருக்கிறார். இந்த தங்க சங்கிலியை பர்தா அணிந்த பெண் ஒருவர், பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில் பர்தா அணிந்த பெண் சிறிது தூரம் சென்று ஒரு ஆட்டோ பிடித்து 2 தெரு தள்ளி இறங்கியுள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கும் போது பர்தா அணியவில்லை.. அந்த பெண்னின் புகைப்படத்தை வைத்து, அடையாளத்தை பாலசுந்தரத்திடம் போலீசார் கேட்டனர். அப்போது தான் சுக்னயா குறித்து பல தகவல்கள் கிடைத்தன.

22 வயதாகும் சுகன்யா பாலசுந்தரத்தின் வீட்டு அருகே வசித்து வருகிறார். பி.பி.ஏ பட்டப்படிப்பு முடித்த சுகன்யா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் வரை சுகன்யா இழந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுகன்யா உயிரையே விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாராம்.

அப்போது தனக்கு நன்கு தெரிந்த முதியவரான பாலசுந்தரம் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து கடனை அடைக்க இந்த மோசடி செயலில் சுகன்யா ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொரட்டூர் குற்றப்பிரிவு போலீசார், சுகன்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+