இருந்த ஒரு சான்சும் போச்சு.. ஆதவ் அர்ஜுனா நீக்கம்.. நெருக்கமானவர்களிடம் விஜய் தந்த ரியாக்சன்!
சென்னை: ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா நீக்க விவகாரம் அப்செட் ஆக்கி உள்ளதாம்.
திருமா அழுத்தத்தின் காரணமாகவே என்னுடன் ஒரே மேடையில் ஏறவில்லை. அவருடன் இதயம் இங்கேயேதான் இருக்கிறது என்றெல்லாம் விஜய் கூறி இருந்தார். அதை திருமா மறுத்தும் இருந்தார். அப்படிப்பட்ட நிலையில்.. விஜய்க்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக திருமா எடுத்த முடிவு அமைந்துள்ளது. விஜய் ஆதவ் அர்ஜுனா புகழ்ந்த விவகாரம்.. அவர் பேசிய விஷயங்கள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. இதனால் எங்கே ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் அவர் கட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேற வாய்ப்புகள் உள்ளன.

ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் சஸ்பெண்ட் செய்வதாக வெளியிட்ட அறிக்கையில்,
1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்., என்று கூறியுள்ளார்.
அப்செட்: ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவாகரத்தை விஜய் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆதவ் அர்ஜுனா நீக்க விவகாரம் அப்செட் ஆக்கி உள்ளதாம்.
ஆதவ் அர்ஜுனா மூலமாகவே விஜய் விசிக தரப்புடன் இணைய முடியும்.. கூட்டணிக்கு பேச முடியும் என்று முயன்று கொண்டு இருந்தார். ஆனால் தற்போது அந்த ஒரு கனெக்சனும் இல்லாமல் போய்விட்டது. இதுதான் விஜய்யை அப்செட் ஆக்கி உள்ளதாம். விசிக உடன் கூட்டணி வைக்க விஜய் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கு ஆதவ் அர்ஜுனா ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பார் என்று விஜய் கருதினார். ஆனால் ஆதவ் அர்ஜுனா நீக்கம் விஜய்க்கு எதிராகி உள்ளது.
இதனால் எங்கே ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜயுடன் நெருக்கம் என்பதை தாண்டி விஜய்க்கு பொருளாதார ரீதியாக சப்போர்ட் தேவை. அவர் சினிமாவில் சம்பாதித்த தொகையை வைத்து தேர்தலை சந்திக்க முடியாது.தேர்தல் நிதி தேவை. அதோடு தேர்தல் வியூகம் வகுக்க ஆட்கள் தேவை.
இது அனைத்தும் ஆதவ் அர்ஜுனாவிடம் உள்ளது. அவர் நிதி தொடர்பாகவும் சப்போர்ட் செய்ய முடியும்.. ஆலோசனை வழங்கவும் அவரிடம் நிறுவனம் உள்ளது. இதனால் விஜய் உடன் ஆதவ் அர்ஜுனா கைகோர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications