"செல்வமகள்" களுக்கு இலவச பஸ் பயணம் டூ செல்வமகள் சேமிப்பு திட்டம்.. உள்ளாட்சியில் கை கொடுத்தவை எவை?
சென்னை: பெண்கள் குழந்தைகளுக்கான திட்டங்கள், சமூக நீதி திட்டங்கள் அரசின் திட்டங்களுக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நகர பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதையடுத்து கோவையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது பிபிஇ கிட் அணிந்து கொண்டு கொரோனா வார்டில் நோயாளிகளை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஜாதியினர்
இதையடுத்து அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், முதல் பெண் ஓதுவார் நியமனம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை திமுக நிறைவேற்றியது. இந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் ஏற்கெனவே உள்ள பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்ற பொய்யான செய்தியை முதல்வர் உடைத்தெறிந்து அதே கோவிலில் அவர்களும் பணியாற்ற உத்தரவிட்டார்.

சமூக நீதி நாள்
அது போல் கொரோனாவால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கியது. மேலும் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்து திராவிடக் கொள்கை கொண்டவர்களையும் தன் பால் ஈர்த்தவர் ஸ்டாலின். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என முழங்கியவர் ஸ்டாலின்.

2ஆவது அலை
கொரோனா 2ஆவது அலை உச்சத்தில் இருந்த போது தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன் வந்த போதிலும் தடுப்பூசி இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து மத்திய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு கேட்டு அது கிடைக்காததால் தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்தவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும் உலகளாவிய டெண்டர்களை கோரினார்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்
மத்திய அரசின் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் பயன்கள் குறித்து அரசாணையாக வெளியிட்டது திமுக அரசு. இதன் மூலம் பெண் குழந்தைகளுக்காக சேமிப்பு திட்டத்தை தமிழகத்தில் அறியாதவர்களுக்கு அறிய செய்தார். இத்தனை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த கிராம சபை கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி முடித்தார். அது போல் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மக்கள் கொடுக்கும் மனுக்களை வாங்கிக் கொண்டு அவர்களிடம் குறையேதேனும் இருக்கிறதா என்றும் கேட்கிறார். இப்படியாக குழந்தைகள், பெண்கள், சமூக நலனுக்கு நலத்திட்டங்களை கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்
சட்டசபை தேர்தலில் வழங்கிய ஆதரவை ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் வழங்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதன் பலனை இன்று அறுவடை செய்து வருகிறார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவை பின்தள்ளிவிட்டு திமுக முந்தி கொண்டு வருகிறது. இத்தகைய வெற்றி ஒரு புறம் ஆளும் கட்சிதான் உள்ளாட்சித் தேர்தலில் வெல்லும் என்ற எழுதப்படாத விதி இருந்தாலும் இது முழுக்க முழுக்க திமுக அரசுக்கு மக்கள் அளித்த ஆதரவாகவே பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications