இவ்வளவு லட்சமா! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி.. அரியர் தொகையில் வரி சலுகை பெறலாம்.. எப்படி?
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலுவை தொகையில் வரி சலுகை பெறுவது மிகவும் எளிதானது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

அதேபோல் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த டிஏ நிலுவை காரணமாக சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரியர்: இந்த உயர்த்தப்பட்ட 42 சதவிகித அகவிலைப்படிக்காக விரைவில் டிஏ நிலுவை தொகை வழங்கப்பட உள்ளது. 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை எவ்வளவு இருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது.
இதை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் உங்கள் அடிப்படை வருமானத்தில் அகவிலைப்படி எவ்வளவு என்று கணக்கிட வேண்டும். உங்கள் சம்பளத்தில் DA கணக்கிட, உங்கள் அடிப்படை சம்பளத்தை தற்போதைய) DA விகிதத்தால் பெருக்கி பின்னர் முடிவை 100 ஆல் வகுக்கவும்.
அதாவது உங்கள் அடிப்படை வருமானம் 29200 ரூபாய் என்னும் பட்சத்தில், DA கணக்கீடு பின்வருமாறு செய்ய முடியும்: (42 x 29200) / 100 = 12264. உங்கள் அடிப்படை வருமானம் 29200 ஆக இருந்தால் ( பே மேட்ரிக்ஸ் நிலை 5). நீங்கள் சம்பாதிக்கும் DA தொகை ரூ. 12264.
இந்த டிஏ தொகைக்கு 18 மாத அரியரை கணக்கிட வேண்டும் என்றால், டிஏ தொகையை மாதங்களால் பெருக்க வேண்டும். 18 மாதங்கள் அரியர் என்றால் அதனால் பெருக்க வேண்டும். அதாவது டிஏ தொகை 18 மாத அரியரோடு 220752 ரூபாயாக இருக்கும்.இந்த தொகைதான் பெரும்பாலும் பேசிக் அரியர் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி சலுகை: இந்த அரியர் தொகையில் வரிசலுகையும் பெற முடியும். அதன்படி நீங்கள் அரியர் பெறும் வருடத்திற்கு பதிலாக, அரியர் கொடுக்க வேண்டிய ஆண்டிற்கான, அதாவது 18 மாதத்திற்கு முன்பு உள்ள வருமானத்தை வைத்து வரியை கணக்கிட்டு வரி சலுகை பெற முடியும். இதற்காக e-filing Portal)பக்கத்தில் படிவம் 10E ஐ (Form 10E) ஆன்லைனில் நிரப்பி அதை தாக்கல் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பிரிவு 89(1) இன் கீழ் விலக்கு மற்றும் சலுகைகள் கிடைக்கும்.

அகவிலைப்படி உயர்வு: வருடா வருடம் விலைவாசி உயர்ந்து வருகிறது. விலைவாசிக்கு ஏற்றபடி எப்போதும் சம்பளமும் உயர வேண்டும். தனியாரில் இதற்காக வருடா வருடம் ஹைக் கொடுக்கப்படும். இதுவே அரசு நிறுவனங்களில் செய்தால் அதை அகவிலைப்படி உயர்வு என்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 4% உயர்த்தி உள்ளது அம்மாநில அரசு. கர்நாடகா மாநிலத்தில் DA விகிதம் 31% இல் இருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications