ஒரே ஒரு மெசேஜ் போதும்.. மொத்த தகவலும் உங்க போனில் குவியும்.. ரேஷன் கடைகளில் சூப்பர் வசதி
சென்னை: ரேஷன் கடைகளில் இருக்கும் பொருட்களை மற்ற விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எளிதாக மெசேஜ் மூலம் இதை தெரிந்து கொள்ள முடியும்.
நாடு முழுக்க ரேஷன் கடைகள் தற்போது நவீனம் ஆகி வருகின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க ரேஷனில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் வசதிகளை மனதில் வைத்து ரேஷன் பொருட்கள் வாங்குவதை எளிதாக்கும் விதமாக வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் ரேஷன் கடைகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் பல அதிரடி திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.
பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.
நவீனம்: ஏற்கனவே ரேஷன் கடைகள் நவீனம் ஆகி வருகின்றன. , தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுக்க அமல்படுத்த போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதத்தில் இருந்து எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது ஒரு ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும். கடைகளில் ஏற்கனவே பயோமெட்ரிக் உள்ளது.
அதாவது கை ரேகை எடுத்து பொருட்கள் கொடுக்கும் முறை உள்ளது. பயோமெட்ரிக் வேலை செய்யாத சமயங்களிலும், இனி கண் மூலம் பொருட்களை வாங்க முடியும். இந்த புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும்.
கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதேபோல் அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின் இன்னும் சில கிராமங்களில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ச்சியாக வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். விரைவில் தமிழ்நாடு முழுக்க கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறாராம்.
எஸ்எம்எஸ்: அதேபோல் ரேஷன் கடைகளில் இருக்கும் பொருட்களை மற்ற விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எளிதாக மெசேஜ் மூலம் இதை தெரிந்து கொள்ள முடியும்.
கீழ்காணும் குறியீட்டை 9773904050 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பவும்
குறுஞ்செய்தி குறியீடு விளக்கம்
PDS 101 - நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள்
PDS 102 - நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது)
PDS 107 - கட்டண தொகை பற்றிய புகாருக்கு அனுப்பலாம். இதற்கான பதில் உங்கள் போனுக்கு மெசேஜாக வரும்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications