சென்னை போலீசாரின் வாகன தணிக்கையில் இருந்து தப்பிக்க வைக்கும் சக வாகன ஓட்டிகள்.. வெளிவந்த சீக்ரெட்
சென்னை: சென்னையில் போக்குவரத்து போலீசார் தினமும் வாகன சோதனை நடத்துவது வழக்கம்.காலையில் 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் போக்குவரத்து சோதனை நடத்துவார்கள்.. அப்படி சோதனை நடத்தும் நேரம், இடம் எல்லாவற்றையும் கூகுளிலேயே அறிய முடியும்.அதை வைத்து எளிதாக வாகன ஓட்டிகள் தப்பிவுது அதிகரித்துள்ளது.இந்த விஷயத்தை போலீசாரும் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
சென்னையில் வசிக்கும் எல்லாருக்குமே இங்கு நடக்கும் தீவிர வாகன சோதனை தெரியும். ஹெல்மெட் அணியாமல் வேளச்சேரியில் இருந்து திருவான்மியூருக்கோ, கிண்டியில் இருந்து வடபழனிக்கோ, கோயம்பேட்டில் இருந்து கீழ்பாக்கத்திற்கோ, சென்ட்ரலில் இருந்து சைதாப்பேட்டைக்கோ போய் வர முடியாது.. சென்னையில் ஒவ்வொரு இரண்டு கிலோ மீட்டர் அல்லது 3 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்துவது வாடிக்கையாகும்.

அதாவது ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரு இடத்தில் வாகன சோதனை நடத்துவார்கள். எப்போதுமே ஒரே இடத்தில் தான் வாகன சோதனை நடத்துவார்கள். அப்படி வாகன சோதனை நடத்த காரணம்.. அந்தஇடத்தில் வாகனங்கள் வேகமாக சென்றுவிட முடியாது. இன்னொரு காரணமும் உள்ளது.அந்த இடம் தான் முக்கியமான சந்திப்பாக இருக்கும். எனவே யாரும் அதை கடக்காமல் தப்பிக்க முடியாதபடி இருக்கும்.
வாகன சோதனை நடத்துவதன் நோக்கம், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும். மதுபோதையில் செல்லக்கூடாது. வாகனங்களில் ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். திருட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சுற்றுவோரை பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட் காரணங்கள் தான்.இதேபோல் கார்கள், நான்கு சக்கர சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து காவலர்களின் வாகன தணிக்கை உதவுகிறது.
ஆனால் போலீசாரின் வாகன தணிக்கையில் இருந்து தப்பிக்க நூதன முறையை வாகன ஓட்டிகள் கையாளுகிறார்கள். இதன்படி சென்னை, தாம்பரம் வட்டாரங்களில் போலீசார் எங்கெல்லாம் நின்று வாகன சோதனை நடத்துவார்கள் என்பதை சக வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம், கூகுளில் மார்க் செய்து வைத்துள்ளார்கள். நீங்கள் கூகுள் மேப்பில் லோக்கேசன் போட்டு போனாலே,உங்களுக்கு போலீஸ் நிற்பார்கள், ஹெல்மெட் போடுங்கள் என்ற கேப்சனை போலீஸ் இருக்கும் இடங்களை பார்க்க முடியும்.
சென்னை முழுக்கவே மார்க் செய்து வைத்துள்ளார்கள் சக வாகன ஓட்டிகள், போலீஸ் எங்கு எல்லாம் நின்றார்களோ, எங்கு எல்லாம் நிற்பார்களோ, அத்தனைஇடங்களையும் நீங்கள் கூகுள் மேப்பில் அறிய முடியும். போலீஸ் இருப்பாங்க, ஹெல்மெட் போடு என்று இருக்கும்.. இதை வைத்து வாகன ஓட்டிகள் தப்பி வருகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். சென்னை, தாம்பரம், பூந்தமல்லி, மறைமலைநகர் வரை முழுமையாக அடையாளப்படுத்தி உள்ளார்கள். இதை போலீசாரும் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications