சிவக்குமார் உதயநிதியை பார்க்க! உடனே பிளைட் ஏறிய எச்.ராஜா! ஒரே நாளில் அல்லோகலம்.. என்னமோ நடக்குது?
சென்னை: நேற்று தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த இரண்டு சம்பவங்களும் அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.
கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை பார்வையிடும் விதமாக, ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் கண்காணிப்பு அறையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டனர். பின்பு அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டில் உள்ள ஈரக்கழிவுகளிலிருந்து இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தினைப் பார்வையிட்டனர். பின்பு மாதவரத்தில் உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தினை பார்வையிட்டனர்.

பின்னர் குழுவினர் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில், பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த செயல் விளக்கத்தினைப் பார்வையிட்டு, கலந்துரையாடினர். இந்நிகழ்வில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், கர்நாடக மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. உமா சங்கர், இ.ஆ.ப., பெங்களூரு மாநகர (BBMP) ஆணையாளர் துஷார் கிரி நாத் ஆகியோர் இருந்தனர்.
என்ன நடக்குது?: இதையடுத்து அமைச்சர் உதயநிதியை டிகே சிவக்குமார் சந்தித்தார். அதைதொடர்ந்து , மேகதாது திட்டத்தால் அதிக பயனடைவது தமிழ்நாடு தான்; மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம். சென்னை சுத்தமாக இருக்கிறது. திடக்கழிவுகளை சிறப்பாக கையாளுகிறார்கள். அவர்கள் இதை கையாளும் விதம் வியப்பு அளிக்கிறது என்று சென்னை ரிப்பன் மாளிகையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக்கு பிறகு, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி அளித்துள்ளார்.
கர்நாடக துணை அமைச்சர் டிகே சிவக்குமார் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லாத நேரம் பார்த்து இங்கே வந்தது.. மேகதாது அணை பற்றி உதயநிதியிடம் பேசியது எல்லாம் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாவது நிகழ்வு: இது ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில்.. அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
பழைய கை: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் பழைய மூத்த நிர்வாகியான எச். ராஜா கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. உதாரணமாக நேற்று பேட்டி அளித்த எச். ராஜா, பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு அல்ல; அது இந்து விரோத மாநாடு; முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பேட்டி அளித்துள்ளார். இத்தனை நாட்களாக பெரிதாக பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்த எச். ராஜா திடீரென இப்படி பேட்டி அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில் கட்சியை தமிழ்நாட்டில் ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் எச் ராஜா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்தி உள்ளார். தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், தமிழ்நாடு பாஜகவில் நிலவும் அரசியல் ரீதியான பிரச்சனைகள், கட்சியின் நிலைமை, அரசியல் ரீதியாக கட்சிக்குள் மோதல்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications