பயப்படாதீங்க.. குட்டையை குழப்பிவிட்ட ரஜினி! கோபத்தில் துரைமுருகன்! உதயநிதி பதிலடி! கையை மீறிய மோதல்
சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது திமுகவில் குட்டையை குழப்பி உள்ளது. திமுகவில் அமைதியாக இருந்த ஒரு பிரச்சனை தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. மூத்த தலைவர்கள் வெளியே வந்து பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.
நேற்று முதல்நாள், அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அதில் மொத்த திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் ரஜினிகாந்த் மிக தீவிரமாக பாராட்டி பேசினார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசுகையில், அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென பாணியை உருவாக்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். தனக்கொரு நல்ல அரசியல் எதிர்காலம் இருக்கு என்று நிரூபிக்கும் வகையில் உதயநிதி செயல்படுகிறார். பேச்சு, செயலில் தனக்கான பாணியை உருவாக்கியவர் அமைச்சர் உதயநிதி.

என்னுடைய பாசத்துக்குரிய, இப்போது தான் கொஞ்சம் நாள் அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென பாணியை உருவாக்கி கொண்டு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று தனக்கொரு ஸ்டாலினை வைத்து.. அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார், என்று பேசினார்.
திமுக பக்கம் சாய்ந்து பேச்சு: அதோடு நிற்காமல், எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது.
சீனியர்கள்: ஒரு கட்சியை கட்டி காப்பது என்பது மிக கடினம், அதை சிறப்பாக செய்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் கையில் புத்தகத்தை பெற்றதில் பெருமை. எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.
ஸ்டாலின் பதில்: இதற்கு ஸ்டாலின் அளித்த பதிலில், என்னை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் எனக்கு அறிவுரை கூறியதற்கு நன்றி. நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம், என்றும் கவனமாக இருப்பேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கும் நன்றி என்று நடிகர் ரஜினியின் அறிவுரையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
துரைமுருகன் கோபம்: . இதற்கு பதில் அளித்த துரைமுருகன், பல்லு விழுந்தபிறகும் நடித்துக்கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதா? என்று கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசிக்கட்ட நிலையிலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்.. இவ்வாறு அவர் கூறினர். ரஜினிகாந்த், "ஓல்டு ஸ்டூடண்ட், கருணாநிதி கண்ணிலே விரல்விட்டு ஆட்டியவர் என்று துரைமுருகனை கலாய்த்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன், "பல்லு விழுந்த நடிகர்கள்" என்று கோபமாக கூறினார்.
உதயநிதி பதிலடி; இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி பேசுகையில், இளைஞர்களுக்கு வழிவிட்டு, வழிநடத்தி, அரவணைத்துச் செல்ல வேண்டும்.. இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும். நேற்று ரஜினிகாந்த் பேசினார். அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார். அது என்ன என்று சொல்ல மாட்டேன்.
ஆனால் அவரின் பேச்சுக்கு ஒரு இடத்தில் கைத்தட்டு அதிகம் வந்தது. அது எந்த இடம் என்று பாருங்கள். நேற்று சூப்பர் ஸ்டார் பேசியதை வைத்தே பாருங்கள். நான் எதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுவதாக நினைக்க வேண்டாம். இதுதான் என் வேண்டுகோள்., என்று உதயநிதியும் தன் பங்கிற்கு துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்தார்.
என்ன நடக்கிறது?: இப்போது உதயநிதி vs துரைமுருகன் என்று நிலைமை திமுகவில் ஏற்பட்டு உள்ளது அல்லது உதயநிதி vs ஸ்டாலின் என்று நிலைமை மாறி உள்ளது. ரஜினியின் நேற்றைய பேச்சை துரைமுருகன் விரும்பவில்லை.. ஆனால் அதை ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ரசித்தார் என்று கூறப்படுகிறது. அதாவது சீனியர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அதற்கு விடக்கூடாது என்றே உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் நினைப்பதாக கூறப்படுகிறது.
இதை தாங்கள் சொல்ல முடியாது.. ஆனால் ரஜினி சொல்லிவிட்டார் என்பதால் உதயநிதி, ஸ்டாலின் ஆகியோர் அதை ரசித்தனர். இன்னொரு பக்கம்.. துரைமுருகன் சில சீனியர்களிடம் பேசி.. ரஜினி என்ன இப்படி பேசி இருக்கிறார்.. முதல்வரும் இதை வழிமொழிகிறார்.. நாம் என்ன ஆட்சிக்கு சிக்கலாகவே இருக்கிறோம் என்று பேசி இருக்கிறாராம். ரஜினியின் பேச்சு காரணமாக துரைமுருகன் பெரிய அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications