ஆம்புலன்சில் துடிக்கும் அந்த உசுரு! மின்தடையால் போராடிய மக்களுக்கு! உள்ளே வந்து ட்விஸ்ட் தந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடுங்கையூரில் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடுமையாக அவதிப்பட்ட நிலையில் சாலையில் இறங்கி போராட்டம் செய்தனர். இந்த சாலை மறியலில் கடைசியில் ஏற்பட்ட ட்விஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மின் தடை காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் பல இடங்களில் மின்சாரம் இன்னும் வரவில்லை என்று போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதிக்கு ஏன் மின்சாரம் வரவில்லை.. ஏன் இன்னும் மின் தடை நிலவுகிறது என்று கோரிக்கை வைத்து மக்கள் போராடி வருகிறார்கள்.

நேற்று இரவில் இருந்தே மக்கள் இந்த கோரிக்கையை வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. சாலையில் இருக்கும் மின்சார பாக்ஸ்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் மின்சாரம் ட்ரிப் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

ட்ரிப்: இப்படி மின்சாரம் ஆவதை தடுக்கும் விதமாக பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனால் 30 - 40 மணி நேரமாக இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் துடி துடித்து வருகின்றனர். இதன் காரணமாக பலருக்கு வீடுகளில் தண்ணீர் வசதி கூட இல்லை. மின்சாரம் இல்லாமல் டேங்கில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் தண்ணீர் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மக்கள் போராட்டம்'; கொடுங்கையூரில் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடுமையாக அவதிப்பட்ட நிலையில் சாலையில் இறங்கி போராட்டம் செய்தனர். 30க்கும் மேற்பட்டோர் சாலையில் இறங்கி கடுமையாக போராட்டங்களை செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் கடைசியில் ஏற்பட்ட ட்விஸ்ட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

How due to an ambulance people stopped their protest in Chennai Kodungaiyur amid flood?

அவர்கள் மறியல் செய்த போது அங்கே போலீசார் ஒருவர் உள்ளே வந்து.. உங்கள் தெருவில் தண்ணீர் உள்ளது. மின்சார பாக் உள்ள இடத்தில் தண்ணீர் உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் எப்படி மின்சாரம் கொடுக்க முடியும். நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்படும். கொஞ்ச நேரத்தில் மின்சாரம் வரும், என்று அந்த போலீஸ் அதிகாரி தனி நபராக அங்கே உள்ளவர்களுக்கு சமாதானம் சொன்னார்.

கேட்காத மக்கள்: ஆனால் அங்கே இருந்த மக்கள் அதை கேட்காமல் நின்றனர். இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது திடீரென அங்கே ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும்.. போராட்டம் செய்த மக்கள் உள்ளே இருக்கிற உசுரு முக்கியம்.. கலைஞ்சு போங்க.. போங்க.. வழியை விடுங்க என்று அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கே போராட்டம் நிறுத்தப்பட்டது.

சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. ஆனால் இன்னும் மழை காரணமாக நிறுத்தப்பட்ட மின்சாரம் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இன்னும் வெள்ளம் விடியவில்லை.

என்ன ஸ்மார்ட் முடிவு; இதனால் கொஞ்சம் கொஞ்சமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் வழங்குவதில் பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் எடுத்து வருகிறது. இதில் அவர்கள் மேற்கொண்ட ஸ்மார்ட் திட்டமிடல் ஒன்று சென்னை மக்களின் உயிரை காப்பாற்றி உள்ளது.

சென்னையில் வெள்ளம் இருப்பதால் உடனுக்குடன் மின்சாரம் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சாலையாக தீவிரமாக சோதனை செய்யப்பட்டன. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வயர்கள் சாலைக்கு கீழே உள்ளன. அண்டர்கிரவுண்ட் வயர்கள் சேதம் அடைந்துள்ளதா.. சாலையில் குழிகள் ஏற்பட்டு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் .

இதை பார்க்காமல்.. அப்படியே மின்சாரம் தர முடியாது. இதற்கு முதலில் தண்ணீர் வடிய வேண்டும். இதற்காக தெரு தெருவாக சோதனை செய்து படிப்படியாக மட்டுமே மின்சார வழங்கப்பட்டது. பொதுவாக இது போன்ற நேரங்களில் எல்லா தெருக்களையும்.. சிறு சிறு தெருக்களாக இருந்தாலும் சரி.. சோதனை செய்யாமல் மின்சாரம் வழங்கினால் பூமியில் இருந்து மின்சார பூதமே கிளம்பி இருக்கும். அதாவது கீழே உள்ள வயர்கள் தண்ணீரில் பட்டு பல இடங்களில் மின்சாரம் பாய்ந்து இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+