பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் லட்சங்களை அள்ளி தரும் அரசு.. விவசாயிகள் சேருவது எப்படி?
சென்னை: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் வெறும் சில 1000 ரூபாய்க்கு காப்பீடு எடுத்துக் கொள்ளும் விவசாயிகள், அதற்கு ஈடாக லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரணம் பெற முடியும். மத்திய அரசின் இந்த திட்டம் குறித்தும், விவசாயிகள் செய்ய வேண்டியது குறித்தும் பார்ப்போம்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன: எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், விவசாயத்தில் நிலைபெற செய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் சேகோரில் தொடங்கி வைக்கப்பட்டது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்பிறகு, சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
பயிர் காப்பீடு செய்த பின்னர் ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டு, பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்து, பயிர் காப்பீடு திட்ட ஆப்பில், 72 மணி நேரத்துக்குள் விவசாயிகள் தெரிவிக்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டத்தில் வசதி உள்ளது. இதன் பின் அந்த பகுதியில் உள்ள வேளாண் அதிகாரி, ஆய்வு செய்து இழப்பீட்டு பயன்களை தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு முறையில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பார். மாநில அளவில் / மாவட்ட அளவில் உள்ள குறை தீர்ப்பு குழு மூலம், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க இத்திட்டம் பெரிய அளவில் உதவுகிறது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: நில ஆவணங்களை, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைப்பது, எளிதான பதிவுக்கு பயிர் காப்பீடு கைப்பேசி செயலி, காப்பீட்டுக்கான ப்ரீமியம் செலுத்தும் வசதி, மானியம் விடுவிப்பு, இழப்பீடு வழங்கும் முறை ஆகியவை பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டப்படி, விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி, அதிக பரப்பில் பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. ஒருவேளை நெல் பயிர்களை விதைக்க இயலா சூழ்நிலை காரணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலரிடம் விதைப்பு சான்று பெற்று விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற முடியும்.
PMFBY: ரூ.716 கட்டினால் ரூ.35800 கிடைக்கும்.. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இவ்வளவு பலனா?
அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமங்களில் மற்றும் குறு வட்டாரங்களில் அறிவிக்கை செய்த பயிர்களை பயிரிடும் விவசாயிகள், குத்தகை விவசாயிகள் உட்பட இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள். வங்கியில் பயிர் கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேருவது எப்படி: விவசாயிகள் முன்மொழி படிவத்துடன், அடங்கல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம். ஆதார் நகல், நில உரிமை பட்டா ஆவணங்களுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம். காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் ஆகும். நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.712 ரூபாய் பிரிமீயம் செலுத்த வேண்டும். மக்கா சோளம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.588 பிரிமியம் செலுத்த வேண்டும். மக்கா சோளம் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாள் ஆகும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications