சிங்கப்பூர் மாதிரி இருந்தது! எதிர்பார்க்கவே இல்லை! சென்னை பார்முலா 4.. வெளிநாட்டு வீரர்கள் பாராட்டு
சென்னை: சென்னையில் நடந்த பார்முலா 4 கார் ரேஸ் போட்டிகளை வெளிநாட்டு வீரர்கள் பாராட்டி வருகின்றனர். போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் பலர் இந்த போட்டிகளை கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக.. ஃபார்முலா 4 ரேஸை மக்கள் கூட்டம் கூட்டமாக கண்டுகளித்தனர். முக்கியமாக சனி, ஞாயிற்றுக்கிழமை மாலை என்பதால் குடும்பங்கள் பலர் டிக்கெட் எடுத்து வந்திருந்தனர். மாலை நேரங்களில் மெரினா, பெசன்ட் நகர் செல்லும் மக்கள், அதை தவிர்த்துவிட்டு இங்கே அதிக அளவில் முன்கூட்டியே டிக்கெட் எடுத்து வந்திருந்தனர்.

மக்கள் கொண்டாட்டம்: முக்கியமாக இந்த நிகழ்வில் குழந்தைகள் பலர் பெற்றோர்களோடு வந்து கண்டுகளித்தனர். ஏ.. அங்க பாருடா.. சர்ர்ன்னு போகுது என்றெல்லாம் குஷியாக பேசியபடி ரேஸை கண்டுகளித்தனர். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், உலகமே வியக்கிற வகையில் #Formula4Chennai Racing on the Street Circuit போட்டி தீவுத்திடலில் நடந்துள்ளது. இந்தப் போட்டியை, நம்முடைய #ChepaukTriplicane தொகுதியில் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு நடமாடும் நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ள 100 மாணவ - மாணவியர் நேரில் காண ஏற்பாடு செய்திருந்தோம்.
புது வரலாறு படைக்கும் வகையில் நடைபெறும் இந்த ஃபார்முலா 4 போட்டியை கண்டு ரசித்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்தும், அன்பும், என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போஸ்ட் செய்துள்ளார்.
வடஇந்தியாவில் ஹிட்: வடஇந்தியாவில் இந்த நிகழ்வு பெரிய ஹிட் அடித்துள்ளது. வடமாநிலங்களில் சாதாரண வாகனங்கள் செல்லவே சாலை சரியில்லை.. ஆனால் தமிழ்நாட்டில் ஸ்ட்ரீட் ரேஸ் எல்லாம் வைக்கிறாங்க பாருங்க என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி போஸ்டுகளை செய்து வருகின்றனர்

வடஇந்தியர்கள் பலர் இதை பாராட்டி போஸ்ட் செய்து வருகின்றனர். இதெல்லாம் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம் என்று நெட்டிசன்கள் பலர் போஸ்ட் செய்துள்ளனர். தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது.. இதனால் முதலீடுகள் வரும் என்று போஸ்ட் செய்துள்ளனர். இன்னும் பலர்.. தமிழ்நாட்டில் நடப்பது போல பெங்களூர் போன்ற இடங்களில் செய்ய முடியாது. அதெல்லாம் கடைசி வரை கனவாகவே இருக்கும் என்று நெட்டிசன்கள் பலர் தமிழ்நாட்டை பாராட்டி வருகின்றனர்.
பாராட்டு: இந்த நிலையில்தான் சென்னையில் நடந்த பார்முலா 4 கார் ரேஸ் போட்டிகளை வெளிநாட்டு வீரர்கள் பாராட்டி வருகின்றனர். போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டினர் பலர் இந்த போட்டிகளை கொண்டாடி வருகின்றனர்.
இந்த போட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் போல உள்ளது பார்க்க. ஏற்பாடுகள் சிறப்பான திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எல்லாம் கவனத்தை ஈர்க்க கூடிய வகையில் உள்ளது என்று வெளிநாட்டு வீரர்கள் பாராட்டி உள்ளனர். வெளிநாடுகளில் நிறைய நைட் ரேஸ் பார்த்திருக்கோம். ஆனா சென்னைல நைட் ரேஸ் என்பது ஒரு பெரிய சாதனை. எங்களுக்கு இதுவே Europe-ல போயி ஓட்டுற மாதிரி இருக்கு, என்று போட்டியாளர்கள் பாராட்டி உள்ளனர்.
சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலை சுற்றிலும் 3.8 கிமீ நீளமுள்ள சர்க்யூட்டில் இந்த கார் ரேஸ் நடந்தது. இதில் 19 சாலை திருப்பங்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications