மோடி பேச்சை விடுங்க.. பால் பொங்கி வரப்போ.. பானையில் பிரச்சனை! இந்தியா கூட்டணியில் திக் சம்பவம்
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பால் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக இந்தியா கூட்டணியில் முக்கியமான சில பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் பாஜக சரிந்து வருவதாக வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தோல்வி பயம் காரணமாக மோடி தற்போது மத ரீதியான பேச்சுக்களை கையில் எடுத்துவிட்டார் என்றும் வாதங்கள் வைக்கப்படுகின்றன.

லோக்சபா தேர்தல் என்றால் எப்போதும் பாஜகதான் திட்டங்களை வகுக்கும். பாஜக என்ன நரேட்டிவ் செட் செய்கிறதோ அதை அடிப்படையாக வைத்தே பிரச்சாரங்கள் நடக்கும். பாஜகதான் தேர்தல் காலத்தில் என்ன பேச வேண்டும் என்பதையே முடிவெடுக்கும். ஆனால் அப்படிப்பட்ட பாஜகவே இந்த தேர்தலில் ஆடிப்போய் உள்ளது.
காரணம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடங்கி பாரத் ஜோடோ யாத்திரை வரை பல விஷயங்கள் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளன. இதன் காரணமாக வேறு வழியின்றி பாஜக இந்த முறை கஷ்டப்பட்டு பிரச்சார தொனியை மாற்ற தொடங்கி உள்ளது.
உதாரணமாக மோடி இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் சொத்துக்களை காங்கிரஸ் கொடுக்கும் என்று கூறினார். இந்துக்களின் சொத்துக்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்துக்களின் தாலியை கூட எடுத்துக்கொள்வார்கள். இந்துக்களின் தங்கத்தை தேடி அவர்கள் வருகிறார்கள். விட மாட்டார்கள், என்று மோடி கூறினார். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அப்படி எந்த அறிவிப்பும் இல்லை என்று மோடி மத ரீதியாக பேச தொடங்கி உள்ளார்.
இன்னொரு பக்கம் பணக்காரர்களுக்கு சொத்து வரி போடப்படும். சாதாரண சொத்து வரி அல்ல பரம்பரை சொத்து வரி. அதாவது பரம்பரையாக உள்ள சொத்திற்கு தனி வரி போடப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னதாக அமித் ஷா பயமுறுத்தி உள்ளார். முழுக்க முழுக்க மத ரீதியாக பாஜக தனது பிரச்சார வியூகங்களை மாற்றி உள்ளார். தோல்வி பயம் காரணமாக மோடி தற்போது மத ரீதியான பேச்சுக்களை கையில் எடுத்துவிட்டார் என்றும் வாதங்கள் வைக்கப்படுகின்றன.
இந்தியா கூட்டணியில் மோதல்: இப்படி 2024 லோக்சபா தேர்தலில் பால் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக இந்தியா கூட்டணியில் முக்கியமான சில பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. ஆம் இந்தியா கூட்டணியில் சிபிஎம், சிபிஐ - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
ராகுல் காந்தி சமீபத்தில் கேரளாவில் பேசுகையில், கேரள முதல்வரை ஏன் பாஜக விமர்சனம் செய்வது இல்லை. அவரை ஏன் பாஜகவின் ஈடி, சிபிஐ கைது செய்வது இல்லை என்று விமர்சனம் வைத்தார். சிபிஎம் தேசிய அளவில் இந்திய கூட்டணியில் இருந்தாலும் கேரளாவில் இல்லை. அப்படி இருக்க கேரளாவில் பினராயி விஜயனை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
இதற்கு பினராயி.. உங்களை பாஜக பப்பு என்று கூறுவதை நீங்கள் இப்போது நிரூபிக்கிறீர்கள். உங்கள் பாட்டியே எங்களை கைது செய்த கதை எல்லாம் உங்களுக்கு தெரியுமா? அப்போதே மண்டி போடாதவர்கள் நாங்கள் நீங்கள் எம்மாத்திரம் என்று விமர்சனம் செய்தார்.
இதனால் சிபிஎம் - காங்கிரஸ் இடையே இந்திய கூட்டணியில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இடது ஜனநாயக முன்னணி (LDF) பிவி அன்வர், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி இதுபோன்ற விஷயங்களை பேச முடியும் என்பது கேள்வியாக மாறி உள்ளது.
அவர் நேரு குடும்பத்தை சேர்ந்தவரா என்பதே சந்தேகமாக உள்ளது. ராகுல் காந்தியின் டிஎன்ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்து. இதில் எந்த சர்ச்சையும் இல்லை என்று கடுமையான கருத்துக்களை பேசி உள்ளார்.
இதனால் இந்தியா கூட்டணியில் தற்போது சிபிஎம், சிபிஐ - காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. அதுவும் டிஎன்ஏ விவகாரம் காரணமாக.. இந்தியா கூட்டணி எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளர் யாராக இருப்பார்.. வெற்றிபெற்றால் யாரை தேர்வு செய்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications