டிசம்பர் 6ல் என்ன நடந்தது? அழகிரி கையை பிடித்த ஸ்டாலின்! துரை தயாநிதி இப்போது எப்படி இருக்கிறார்?
சென்னை: முன்னாள் அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவரின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருக்கிறார். நண்பரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றவர்.. அங்கே நண்பர்களுடன் பேசிவிட்டு.. நேரம் ஆனதால் வீட்டிற்கு செல்லாமல் வேறு ஒரு நண்பரின் வீட்டிலேயே தூங்கி உள்ளார்.

அவரை காலையில் எழுப்ப நண்பர் முயன்று உள்ளார். ஆனால் துரை தயாநிதி எழுந்திருக்கவில்லை. அவர் சுயநினைவு இன்றி காணப்பட்டு உள்ளார். அவரை எழுப்பும் முயற்சிகள் தோல்வி அடைந்ததும் உடனே அவரின் மனைவிக்கு நண்பர் போன் செய்துள்ளார்.
மருத்துவமனை அனுமதி: இதையடுத்து அங்கே வந்த அவரின் மனைவி.. துரை தயாநிதி சுயநினைவின்றி இருப்பதால் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். அதேபோல் உறவினர்களுக்கும் போன் செய்து பேசி உள்ளார். இதையடுத்தே சென்னை அப்பலோ மருத்துவமனையில் துரை தயாநிதி சேர்க்கப்பட்டார்.
அங்கே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஷயம் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அங்கே சென்றுள்ளார், மொத்தமாக 4 முறை ஸ்டாலின் அங்கே சென்று விசாரித்துள்ளார். மு க அழகிரி கொஞ்சம் இதனால் கடும் வருத்தத்தில் இருந்துள்ளார். அவரை சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.

கையை பிடித்தார்: அவரின் கையை பிடித்து.. கவலைப்பட வேண்டாம். மருத்துவர்கள் பார்க்கிறார்கள். தம்பிக்கு சீக்கிரம் சரி ஆகிடும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். அதோடு மொத்தமாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம் அங்கே விசிட் அடித்துள்ளது. அழகிரி கூடவே தயாநிதி, கலாநிதி மாறன் குடும்பமும் இருந்துள்ளது.
அவர்கள் மருத்துவமனையை விட்டு செல்லாமல்.. அங்கேயே அழகிரிக்கு ஆறுதலாக இருந்துள்ளனர். துரை தயாநிதி உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்களிடம் கேட்டு வந்துள்ளனர். அவருக்கு பல எக்ஸ்பர்ட்ஸ் அடங்கிய மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்துள்ளது.
துரை தயாநிதி : துரை தயாநிதிக்கு என்ன பிரச்சனை என்பது உறுதியாக தெரியவில்லை. அவரின் பிரச்சனை தொடர்பாக பல்வேறு செய்திகள் வந்தன. ஆனால் எந்த மருத்துவ பாதிப்பும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மருத்துவமனை வட்டாரங்கள் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டு துரை தயாநிதியின் உடல் பாதிப்பு என்ன என்பதை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை எப்படி இருக்கிறது: இந்த நிலையில் மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு என்பது அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் அவருக்கு ஐசியூவில் வைத்து ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது.
அவர் தற்போது கண் விழித்துள்ளார். அதோடு சுயநினைவோடு உள்ளார். அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக மருத்துவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பல துறை மருத்துவர்கள் இந்த குழுவில் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
-
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications