இதுதான் இந்தியா.. ஒரே நேரத்தில் இஸ்ரேல்.. ஈரான்.. அமெரிக்காவை குழப்பும் யுக்தி.. மோடி மாஸ்டர்பிளான்
சென்னை: ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா போர் விவகாரத்தில் இந்தியா தெளிவோடு செயல்பட தொடங்கி உள்ளது. மற்ற நாடுகளிடம் இல்லாத பெரிய தெளிவு இந்தியாவிடம் காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது. இவை முழுமுதற் போராக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் ரஷ்யாவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை.

ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு போர்களும் (இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர்) நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும் - இந்தப் போர்கள் புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது. அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இரண்டு போர்களும் போரில் ஈடுபட்டு உள்ள நாடுகளின் நட்பு நாடுகளுக்கும் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளை உள்ளே கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக முயன்று வருவதாக உலக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்
உலகப்போர் மூளும் அபாயம்: ஈரான் தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா குழுக்கள் மற்றும் ஈரான் நாட்டு ராணுவத்தின் கூட்டு தாக்குதலாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியா நிலைப்பாடு: ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியா தெளிவோடு செயல்பட தொடங்கி உள்ளது. ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மோதல் தொடர்பாக, அந்த நிகழ்வுகள் குறித்து இன்றுவரை நேரடி அறிக்கைகள் எதுவும் இந்தியா சார்பாக வெளியிடப்பவில்லை. இதுவரை யாருக்கும் இந்தியா நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஈரானுக்கு பரம எதிரியாக இருந்த.. சவூதி கூட ஈரானிய இறையாண்மைக்கு ஆதரவாகவே கருத்துக்களை வெளியிட்டு உள்ளது. ஆனால் இதுவரை இந்தியா ஒரு ஸ்டேட்மென்ட் கூட வெளியிடவில்லை. இந்தியா தனது தீவிரவாத குழு பட்டியலில் ஹமாஸைத் தடை செய்யவில்லை. அதே சமயம் ஹமாஸுக்கு ஆதரவாகவும் பேசவில்லை.
இந்தியா எப்போதுமே அணி சேராத நாடாக இருந்தே வந்துள்ளது. போர்களின் போது கருத்து தெரிவிக்கும். ஆனால் இந்தியா எப்போதும் அணி சேராது. அந்த நாட்டுடனும் இணைந்து செயல்பாடு. அல்லது போர் செய்யாது. மோடிக்கு கீழ் இந்தியாவின் கொள்கைகள் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி மாறவில்லை.. இந்தியாவின் அணி சேராத நாடு கொள்கை தொடரும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.
இந்தியா ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்தியா இன்னொரு பக்கம் சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் கூட நெருக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே இந்த விவகாரத்தில் இதுவரை இந்தியா எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எந்த பக்கமும் தலை சாய்க்காமல் கிட்டத்தட்ட இந்திய அரசு உலக நாடுகளை ஒரு எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்க தொடங்கி உள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications