Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கிளம்புங்க".. செந்தில்பாலாஜி கண்ணும் திறக்கல, காதும் கேட்கல.. டெல்லிக்கு பறந்த ரிப்போர்ட்.. அடுத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கான ஏற்பாடுகளை அமலாக்கத்துறை செய்து வருவதாக தெரிகிறது. என்ன நடக்கிறது ஓமந்தூரில்?

இன்று அதிகாலை கைது நடவடிக்கையில் இறங்கிய நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.. ஆனால், அமைச்சருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுவிடவும், உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..

ஆனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து வெளியாகும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி தந்து வருகின்றன..

உடல்நலக்குறைவு: முன்னதாக, விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றபோதுதான், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. பிறகுதான், அவரது கைது குறித்து செந்தில் பாலாஜி சகோதரரிடம் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனநிம்மதியை குலைக்கும் விதமாக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. இது ஒரு மனித உரிமை மீறல் என்று திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

How is Senthil balajis health condition now and enforcement department plans to take senthil balaji to delhi aiims

உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தைதான் குறிப்பிட்டு பேசுகிறார்.. "தொடர்ச்சியாக 24 மணி நேரம் விசாரணை செய்து சித்ரவதை செய்துள்ளனர். இது ஒரு மனித உரிமை மீறல்... செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டிருக்கிறார்.. மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.. ஐசியூவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சுய நினைவில்லை.. நான்கைந்து முறை கூப்பிட்டும், கண் திறக்கவில்லை.. காது பக்கம் வீக்கமாக உள்ளது என்று சேகர் பாபு சொல்லி உள்ளார்.

மருத்துவமனை: அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே விழிப்பாய் இருக்கிறார்கள்.. ஒவ்வொருவராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இதனால் தமிழகம் உட்பட திமுகவுக்குள்ளேயே ஒருவித பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே, செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்று ஒரு பேட்டிக்கு மருத்துவமனை டாக்டர்கள் பேட்டி தந்துள்ளனர்.. அதில், 'செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது. இதய துடிப்பில் மாற்றம் இருந்தது. ECG யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க ICUவில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளனராம்.

எய்ம்ஸ்: இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் வருவதாக தகவல் வெளியானது.. அட்மிட் செய்யப்பட்டதில் இருந்து, தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், எய்ம்ஸ் டாக்டர்கள் வரப்போவதாகவும், இங்கு வந்து சிகிச்சையை தர போவதாகவும் கூறப்பட்டது.

டாக்டர்கள்: மற்றொருபுறம், மத்திய அரசின் சென்னை பெரம்பூர் ரயில்வே டாக்டர்களை அழைத்து வந்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து பரிசோதிக்கவும் திட்டமிட்டு வந்தனர்.. இந்த டாக்டர்கள் செந்தில் பாலாஜியை முழுமையாக பரிசோதித்துவிட்டு, உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று சொன்னால், அவரை உடனடியாக டெல்லி அழைத்து செல்ல அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளனராம்..

இப்போதைக்கு, இதயத்துடிப்பு, ஆக்சிஜன் லெவல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது... அநேகமாக 3 நாட்கள் வரை செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படும் என்கிறார்கள்.. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ தரப்பட வேண்டியிருக்குமாம். தற்சமயம், உடல்நிலை சரியாக இருக்கும் நிலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் அனுமதிக்காததால், டெல்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ன காரணம்: மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்கள், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருவதையடுத்து, அவர்களின் ஆலோசனைப்படி, சென்னையிலேயே சிகிச்சை தரப்படுமா? அல்லது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா? என்பது குறித்து அமலாக்கத்துறைதான் முடிவெடுக்கும் என்கிறார்கள்..

அப்படியானால் ஓமந்தூரார் டாக்டர்களை அமலாக்கத்துறையினர் நம்பவில்லையா? எதற்காக திடீரென எய்ம்ஸ் டாக்டர்கள்? எப்படியாவது எய்ம்ஸ்ஸுக்கு அழைத்து சென்றுவிட அமலாக்கத்துறை துடிப்பது ஏன்? என்ற அடுத்தடுத்த கேள்விகளும் வட்டமடிக்க துவங்கி உள்ளன.

இதனிடையே, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆஞ்சியோ மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆன்லைனில் இந்த மருத்துவ அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் ஆலோசனையையும் கருத்துக்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டு அறிகிறார்கள். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்.

பைபாஸ் சர்ஜரி: இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்வதாக தெரிகிறது.. செந்தி்ல் பாலாஜிக்கு சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உடனடியாக செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வயது 47, அவருக்கு இருதய ரத்த நாள பரிசோதனை 14.06.2023 காலை 10.40 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+