இனி தமிழ்நாடுதான் எப்பவும் நம்பர் 1.. அடிச்சிக்கவே முடியாது! ஏன் தெரியுமா?
சென்னை; தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னையில் சந்திப்பார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி மின்னணு சாதன துறையில் தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் 1 ஆக நீடிக்க போகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் முறையாக அமைகிறது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை எய்தும் வகையில் தமிழ்நாட்டிலும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அரபுநாடுகள், பிரான்ஸ் ஆகிய வெளிநாடுகளிலும், முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தி அவற்றின் மூலம் 9 இலட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்துள்ளார்கள். அவற்றின் பயனாக தமிழ்நாட்டில் 30 இலட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்கள் அமெரிக்கா சென்றுள்ளார்கள். அங்கு உலகப் புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகளுடன் சென்று தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள்.
இந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, கூகுள் நிறுவன அதிகாரிகள் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளார்கள்.
இது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்கு கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னை வர உள்ளனர். இதன் மூலம் சென்னைக்கு அருகில் கூகுள் பிக்சல் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாகும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெற்றுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது, என்று தெரிவித்துள்ளனர்.
நம்பர் 1 தமிழ்நாடு; ஏற்கனவே 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது.
இந்த வருடம் இது 15 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கர்நாடக வெறும் 4.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை மட்டுமே மேற்கொண்டு உள்ளது.
மற்ற மாநிலங்களின் அளவு:
உத்தரப் பிரதேசம் - $3.92 பில்லியன்
மகாராஷ்டிரா - $2.81 பில்லியன்
குஜராத் - $2.38 பில்லியன்
டெல்லி - $1.40 பில்லியன்
ஹரியானா - $625.94 மில்லியன்
தெலுங்கானா - $564.81 மில்லியன்
தமிழ்நாடு சாதனை: தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 31% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. 2.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் மகாராஷ்டிரா நான்காவது இடத்தில் உள்ளது. 2.13 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் குஜாத் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் 7.8 பில்லியன் டாலர் ஏற்றுமதியானதுதான் இந்தியாவில் தனி ஒரு மாநிலம் மேற்கொண்ட அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். 3.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.
ஐபோன் காரணம்; தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஐபோன் உற்பத்தி இதற்கு முக்கிய காரணம் ஆகும். டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.
டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது.
50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னையில் சந்திப்பார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி மின்னணு சாதன துறையில் தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் 1 ஆக நீடிக்க போகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications