ரூ.2,689 கோடி செலவில் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் இடையே 6 வழிச்சாலை.. எப்படி அமைகிறது.. விவரம்
சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்பட அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்திற்கு ஏராளமான கனரக வாகனங்கள் தினமும் வருகின்றன.இந்த வாகனங்களால் சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் இடையே 6 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சாலை குறித்து பார்ப்போம்.
சென்னையில் எல்லா சாலையிலுமே நெரிசல் அதிகம் என்றாலும், வட சென்னை பகுதிகளில் கனரக வாகனங்களில் ஏற்படும் நெரிசலும், அதனால் மக்கள் படும் அவதியையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் இருந்து தினமும் ஏராளமான கண்டெய்னர் லாரிகள் துறைமுகம் செல்கின்றன.

இதுதவிர தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திராவில்இருந்தும் ஏராளமான கண்டெய்னர் லாரிகள் வந்த வண்ணம் உள்ளன. காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வாகனங்கள் துறைமுகம் செல்கின்றன. இப்படி வரும் வாகனங்களால் நெரிசல் அதிகமாக இருக்கிறது.
மாமல்லபுரம் நெம்மேலியில் 1500 மீ நீள ராட்சத குழாய்கள் கரை ஒதுங்கியது எப்படி? ஆடிப்போன அதிகாரிகள்
எல்லைச்சாலை திட்டம்
சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் சாலையில் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையிலும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 132.87 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட இருக்கிறது.
திருவள்ளூர் புறவழிச்சாலை
எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 132.87 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலையின் ஒரு பகுதியாக திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 30.10 கிலோ மீட்டர் நீளத்துக்கு 6 வழிச்சாலை மற்றும் இருவழி சர்வீஸ் சாலை (இருபுறமும்) அமைக்கப்பட உள்ளது.
ஆறுவழிச்சாலை
இதில் திருவள்ளூர் புறவழிச்சாலையில் இருந்து வெங்காத்தூர் வரை 10.4 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.1,133.20 கோடியிலும், வெங்காத்தூர் முதல் செங்காடு வரை 10 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.593.27 கோடி செலவிலும், செங்காடு முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 9.70 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.963.27 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 30.10 கிலோ மீட்டர் சாலை பணிகள் ரூ.2 ஆயிரத்து 689 கோடியே 74 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள், ஒரு ரெயில்வே மேம்பாலம் மற்றும் 2 பெரிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications