சிக்ஸர் அடித்த திமுக.. எங்கேன்னு பாருங்க.. வெளிவரும் ஆச்சரிய ரிசல்ட்கள்.. அதிர்ச்சியில் அதிமுக..!
திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில், தொடங்கி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுகவே முன்னிலை வகித்து வருகின்றது. இது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் இன்று காலை சரியாக 8 மணிக்கு எண்ணும் பணி ஆரம்பமானது.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 200 வார்டுகள் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு 15 மையங்களில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

தபால் ஓட்டுக்கள்
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன.. அதற்கு பிறகு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.. அதிகபட்சமாக 3 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 2 மணி நேரத்தில், அதாவது 10 மணியளவில் முடிவு நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 12 மணிக்கு பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் முழு விவரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

போட்டியின்றி தேர்வு
இந்நிலையில், வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்ட உடனேயே திமுக முன்னிலை வகிக்க ஆரம்பித்துவிட்டது.. குறிப்பாக, மாநகராட்சிகளில் 4 பேர், நகராட்சிகளில் 18 பேர், பேரூராட்சிகளில் 196 பேர் என 218 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 4 இடங்களில் தேர்வாகி உள்ளது. நகராட்சிகளில் 3,842 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 15 இடங்களிலும் மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் தேர்வாகி உள்ளது.

பேரூராட்சிகள்
பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 107 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் மற்ற கட்சிகள் 75 இடங்களிலும் தேர்வாகி உள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தாலும், வாக்கு எண்ணிக்கைகளில் திமுகவே பிரதானமாக முன்னிலை வகித்து வருகிறது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளர் வாசுகி 411 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மாவட்ட நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சி 1வது வார்டில் திமுக வேட்பாளரும், 2வது வார்டில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளார்.. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 1,2 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.. வேடப்பட்டி பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக, 1 வார்டில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.. சென்னை மாநகராட்சி 15வது வார்டில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெயராணி வெற்றி பெற்றுள்ளார். 2 வது வார்டில் சிபிஎம் வேட்பாளர் லட்சுமி வெற்றி பெற்றுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரம்!
மாநகராட்சிகள்
திமுக கூட்டணி - 6
அதிமுக - 0
பாஜக - 0
நகராட்சிகள்
திமுக அணி- 18
அதிமுக- 1
பிறர்-1
பேரூராட்சிகள்
திமுக அணி-66
அதிமுக- 5
பாஜக- 2
பிறர்- 22
திருவாரூர் மாவட்டம் நன்னிலம்
திமுக -1
அதிமுக -1
நெல்லை
மூலக்கரைப்பெட்டி
திமுக 1
காங்கிரஸ் 1
திசையன்விளை பேரூராட்சி 1 வார்டில் காங்கிரஸ் வெற்றி
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications