Flash Back:1994ல் ஆளுநர் சென்னாரெட்டி ஒப்புதல் இல்லாமல் அமைச்சரவையை அதிரடியாக மாற்றிய சிஎம் ஜெயலலிதா
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் மற்றும் ஆளுநர் ஒப்புதல் குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதேபோல 29 ஆண்டுகளுக்கு முன்னரும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான சர்ச்சை தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.
1991-1996-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் அதிக முறை அமைச்சரவையை மாற்றி அமைத்த சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா அம்மையார். இத்தனையாவது முறையாக தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் என தலைப்புச் செய்தியாக எழுவதுதான் அவரது காலத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகள் கடைபிடித்த மரபுகளில் ஒன்று.

ஜெயலலிதா காலத்தில் அமைச்சரவை மாற்றம் அப்படித்தான் திடீர் திடீரென நிகழும். சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதாலேயே அடுத்த நாள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு புதியதாக ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட வரலாற்றையும் படைத்தவர் ஜெயலலிதா. அப்படியான ஆளுமை கொண்ட ஜெயலலிதாவுடன் ஆளுநர் நான் என்ற கோதாவில் மல்லுக்கட்டினார் சென்னாரெட்டி. அப்போது பாஜக இந்திய அரசியல் சீனில் உதயமாகிக் கொண்டிருந்தது. சென்னாரெட்டி ஆந்திராவின் முன்னாள் முதல்வர். முதுபெரும் காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்.
1994-ம் ஆண்டு அக்டோபர் 8-ல் சில அமைச்சர்களது இலாகாக்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா மாற்றி அப்போது ஆளுநராக இருந்த சென்னாரெட்டிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் 1994-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி வரை அதாவது சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக ஆளுநர் சென்னாரெட்டியிடம் இருந்து இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் வரவில்லை.
இதனையடுத்து அதிரடிக்குப் பெயர் பெற்ற ஜெயலலிதா, 1994-ம் ஆண்டு நவம்பர் 16-ந் தேதி தன்னிச்சையாகவே அமைச்சரவை இலாகா மாற்றங்களை அறிவித்தார். அரசியல் சாசனப்படியான முதல்வருக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். இதன் பின்னர் இந்த அமைச்சரவை மாற்றத்தை ஏற்று 1994 நவம்பர் 21-ந் தேதி ஆளுநர் சென்னாரெட்டி, ஒப்புதல் தந்து கையெழுத்திட்டார். அப்போது செங்கோட்டையன், ஜெயக்குமார், மதுசூதனன், இந்திரகுமாரி, லாரன்ஸ் ஆகியோரது துறைகளைத்தான் ஜெயலலிதா மாற்றி அமைத்தார்.
அத்துடன் சர்ச்சை ஓயவில்லை. 1994-ல் ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் முதல்வர் ஜெயலலிதா இலாகா மாற்றம் செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் ராமு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சிவராஜ் பாட்டீல் இவ்வழக்கை விசாரித்தார். 1994-ல் அமைச்சரவை மாற்றம் தொடர்பான இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, பொதுமக்கள் நலன் கருதி அமைச்சரவை இலாகா மாற்றம் செய்வது சட்டவிரோதம் இல்லை; முறைகேடும் இல்லை என ஜெயலலிதா தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
இப்படியான ஆளுநர் சென்னாரெட்டி- முதல்வர் ஜெயலலிதா மோதலின் உச்சம்தான் அந்த கிளைமாக்ஸ்.. தமிழ்நாடு வரலாறு மறக்காதது. அதாவது தமிழ்நாடு ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா பகீர் புகார் கூறியதும் இந்த சர்ச்சைகளின் தொடர்ச்சிதான் என்பது அண்மைய அரசியல் வரலாறு.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications