தமிழ்நாட்டில் உயரப்போகும் கார், பைக் விலை? எவ்வளவு அதிகரிக்க வாய்ப்பு?
சென்னை: மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களின் சாலை வரியை 5 சதவீதம் வரை அரசு உயர்த்தினால், தமிழ்நாட்டில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசு வருவாயை அதிகரிக்க பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அரசுக்கு டாஸ்மாக், வணிகத்துறை, பத்திரப்பதிவு துறை ஆகியவற்றில் அதிக வருவாய் வருகிறது. இதுதுதவிர, வாகன பதிவு, சாலை வரி போன்றவற்றிலும் கணிசமாக வரி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2008 இல் தமிழக அரசு இருசக்கர வாகனங்களுக்கு சாலை வரியை உயர்த்தியது. அதன்பிறகு உயர்த்தவில்லை. அதேபோல் 13 வருடங்களுக்கு முன்பு கார்களுக்கான சாலை வரியும் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு உய்ர்த்தப்பட்டவில்லை.
இரு சக்கர வாகனத்தின் விலையில் 8 சதவீதமும். கார்களுக்கு ரூ.10 லட்சத்துக்குள் விலை இருந்தால் 10 சதவீதம், ரூ.11 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள கார்களுக்கு 15 சதவீதம் சாலை வரியாக தமிழநாட்டில் தற்போது விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் வாகனங்களுக்கான சாலை வரி உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படியே தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆணையரகம் சார்பில், வாகனங்களின் சாலை வரியை உயர்த்துவது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது சாலை வரியை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி, வாகனங்களைப் பொறுத்து 2 முதல் 5 சதவீதம் வரை சாலை வரி உயரக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.1 லட்சம் வரை இருந்தால் 10 சதவீதமும், அதற்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், கார்களில் ரூ.5 லட்சம் வரை 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 15 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20 சதவீதம் வரையும் வரி விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு அனுப்பிய பரிந்துரை குறித்து முதல்வர் ஸ்டாலின் கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அப்படி ஒருவேளை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களுக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்டால், தமிழ்நாட்டில் பைக் மற்றும் கார்களின் விலை கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது. சாலைவரி உயர்வால் இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.16 ஆயிரம் வரையிலும், கார்களின் விலை லட்சக்கணக்கிலும் உயர வாய்ப்பு உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
அதேநேரம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் பயன்படுத்தப்பட்டால், இரண்டாவது காருக்கு அதன் மொத்த விலையில் 50 சதவீதம், மூன்றாவது காருக்கு 60 சதவீதம் என்ற அளவில்கூட சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி என்ற பெயரில் வசூலிப்பதில் தவறு இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியல் தருவோம்' என்று கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க. அரசு, சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்துவதற்கு முடிவெடுத்து உள்ளதாக அனைத்து நாளிதழ்களிலும் வெளிவந்துள்ள செய்தி, ஏற்கெனவே தமிழக மக்களின் வயிற்றில் எரிந்து கொண்டிருக்கும் தீயில், எண்ணெய் வார்த்ததைப் போல் உள்ளது. ஏற்கனவே வாகனங்கள் வாங்கும்போது ஆயுட்கால வரி செலுத்தியுள்ள சூழ்நிலையில், ஏன் நாங்கள் டோல்கேட் வரி செலுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த டோல்கேட் வரியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உயர்த்தப்படும் நிலையில், இந்த தி.மு.க. அரசு மீண்டும் வாகனங்களுக்கான சாலை வரியை 5 சதவீதம் அளவிற்கு உயர்த்த முடிவெடுத்திருப்பது தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏற்கனவே இரண்டு முறை மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, பஸ்களில் மறைமுகக் கட்டண உயர்வு என்று அரசுக்கு வரும் வரி வருவாய்களை உயர்த்தி, வாக்களித்த தமிழக மக்களை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படாத சாலை வரியை, தற்போது 5 சதவீதம் வரை உயர்த்த முடிவெடுத்திருப்பதைப் பார்க்கும்போது, தமிழக மக்களிடம் இருக்கும் கடைசி ரூபாயையும் பிடுங்கும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எளிய மற்றும் நடுத்தர மக்கள் தினமும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்தில் செல்வதற்கு வசதியாக, சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்; குடும்பத்துடன் செல்வதற்கு வசதியாக சிறிய ரக நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவுக்கு தடை போடும் விதமாக, சாலை வரியை உயர்த்தி வாகனங்களின் விலையை மேலும் உயர்த்த வழிவகை செய்துள்ளது.
தி.மு.க. அரசு ஏற்கனவே தனது தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்து 26 மாதங்கள் ஆனபின்னும் இதுவரை பெட்ரோல் விலையை தேர்தல் நேரத்தில் அறிவித்த படி குறைக்காத நிலையில், சாமானிய மக்களின் சொந்த வாகனம் வாங்கும் கனவினை கலைக்கும் விதமாக, சாலை வரியை உயர்த்த முடிவெடுத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் 5 சதவீதம் சாலை வரியை உயர்த்துவதற்கு முடிவெடுத்திருக்கும் தி.மு.க. அரசு, மக்கள் நலன் கருதி இதனை உடனடியாகக் கைவிட வேண்டும்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications