காங். தலைவர் தேர்தல்! விமானத்தில் வந்த வாக்குச்சீட்டு! தமிழகத்தில் எத்தனை பேருக்கு வாக்களிக்க தகுதி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 9,300 நிர்வாகிகள் வாக்களிக்க உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 711 நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருக்கின்றனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர்

காங்கிரஸ் தலைவர்


காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க முடியாது என ராகுல்காந்தி மிகத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. மல்லிகார்ஜூனே கார்கேவும், சசி தரூரும் காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற முட்டி மோதி வருகின்றனர். இந்தியா முழுவதும் 9,300 நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றிருக்கின்றனர். ஓட்டுப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

வாக்குச்சீட்டுகள்

வாக்குச்சீட்டுகள்

வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை பொறுத்தவரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லியிலிருந்தே விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு சீல் வைக்கப்பட்டு மீண்டும் விமானம் மூலம் டெல்லிக்கே அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் 711 நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றிருக்கின்றனர்.

ஏற்பாடுகள் தயார்

ஏற்பாடுகள் தயார்

தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதனிடையே 4 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் காலை முதலே களை கட்டிக்காணப்படுகிறது. தலைவர் தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டுப்போடுவதற்காக வெளியூர் நிர்வாகிகள் நேற்றே சென்னை புறப்பட்டு வந்து முகாமிட்டுள்ளனர்.

மல்லிகார்ஜுனே கார்கே

மல்லிகார்ஜுனே கார்கே

தமிழகத்தை பொறுத்தவரை மல்லிகார்ஜுனே கார்கேவின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சசிதரூருக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் சசிதரூர் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+