"வெயிட்" மெசேஜ்.. எடப்பாடி பற்றி சொன்னாராமே சசிகலா.. ஹார்டு டிஸ்க் என்னாச்சு.. டென்ஷனில் "தலைகள்"
எடப்பாடி பழனிசாமி குறித்து அதிகாரிகளிடம் சசிகலா சொன்னதாக தெரிகிறது
சென்னை: கொடநாடு விவகாரம் சூடுபிடித்துவிட்ட நிலையில், அதிமுக மேலிடத்துக்கு புது கலக்கம் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2017, ஏப்ரல் 24-ம் தேதிதான் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.. காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், பங்களாவில் இருந்த பணம், பொருள்கள் மற்றும் பல ஆவணங்கள் காணாமல் போயின.
எனினும் முதல்வர் என்ற அதிகாரம் கையில் இருந்த நிலையில், கொடநாடு கேஸ், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது... மக்களாலும் லேசாக மறக்கப்பட்டது..!

எஸ்டேட் மர்மம்
இது தற்காலிக தீர்வை பெற்று தந்தாலும், திமுக தன்னுடைய பிரச்சாரத்தில் சொல்லியது போலவே மீண்டும், ஆட்சிக்கு வந்து வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது.. சசிகலாவை கடந்த 2 நாட்களாக அழைத்தும் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர். ஜெயலலிதா எப்போது கொடநாடு சென்றாலும், அவருடன் சசிகலாவும் செல்வது வழக்கம் என்பதாலும், பங்களா சசிகலாவின் கன்ட்ரோலில் இருந்ததாலும்தான், அவரிடம் விசாரணை நடத்த வேண்டியதாகிவிட்டது.

பங்களாவில் திருட்டு
மேலும், பங்களாவில் எவ்வளவு பணம் இருந்தது? என்னென்ன ஆவணங்கள் இருந்தன? லாக்கர் சாவி உட்பட கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் ஒவ்வொன்றாக கேட்டுள்ளனர்.. ஆனால், முதல் நாள் சசிகலா சரியாக பதில் சொல்லவில்லை என்றே தகவல்கள் வெளியானது.. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் சொன்னாரே, அதுபோலவே, தெரியாது, ஞாபகம் இல்லை என்றே பெருமளவு கேள்விகளுக்கு பதில் சொன்னாராம். ஆனாலும், விசாரணைக்கு சசிகலா ஒத்துழைப்பு அளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஹெல்த் பிரச்சனை
அதற்கு பிறகு நேற்றும், அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.. சசிகலா உடம்பு சரியில்லாமல் இருப்பதால், அவரது இருப்பிடத்துக்கே சென்றுதான் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. நடந்த சம்பவத்தின்போது, தான் ஜெயிலில் இருந்ததால், கொள்ளை, கொலை பற்றி தனக்கு தெரியாது என்றுதான் சசிகலா சொன்னாராம்.. எனினும், எடப்பாடி பழனிசாமி பற்றி, ஏதோ வெயிட்டான மெசேஜ் அதிகாரிகளிடம் சசிகலா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது..

எகிறும் பிபி
பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடக்கும்போது, சசிகலா ஜெயிலில் இருந்தாலும், அப்படி என்ன முக்கியமான விஷயத்தை அதிகாரிகளிடம் சொல்லி இருப்பார் என்பதுதான் எகிறும் எதிர்பார்ப்பாக உள்ளது.. பல விஷயங்கள் அனைத்தும், டாக்குமெண்ட்களாக, ஹார்ட் டிஸ்க்குகளாக இந்த பங்களாவில்தான் பாதுகாத்து வந்தனராம்.

புகார்கள்
அதேபோல, யார் மீது எந்த புகார்கள், பிரச்சனைகள் வருகிறதோ, அப்போது இந்த தகவல்கள்தான் உதவியாகவும் இருந்து வந்துள்ளது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் கொடநாடு பங்களா... சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ள நிலையில், சென்னையில் பேசப்படாத எத்தனையோ அரசியல் விவகாரங்களை இந்த பங்களாவில்தான் பேசுவார்களாம்.

ஹார்ட் டிஸ்க்குகள்
அவை அனைத்துமே சிசிடிவியில் பதிவாகி இருந்தது என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சிடி, டாக்குமெண்ட்கள், ஹார்ட் டிஸ்குக்கள் ஒரே நாளில் காணாமல் போயுள்ளதால், ஒருவேளை அதை பற்றி ஏதாவது சசிகலா அதிகாரிகளிடம் சொல்லி இருப்பாரா என்ற டவுட்டும் எழுந்துள்ளது.. இதெல்லாம் சேர்ந்துதான், அதிமுக மேலிடத்தின் கூடாரத்தை கிடுகிடுக்க வைத்து வருகிறதாம்.. இந்த கொடநாடு மேட்டரில் அடுத்து என்னதான் நடக்க போகிறது.. பார்ப்போம்..
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications