Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூனைக்குட்டி வெளியே வருது.. திமுகவின் "ஆணிவேர்" அசையுதா.. யாரந்த 2 "முகங்கள்?..கையை பிசையும் மேலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி வலுவாகி வருகிறது.. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி என்ன செய்ய போகிறது? காங்கிரசுக்கு எத்தனை சீட்கள் கிடைக்க போகின்றன? என்ற எதிர்பார்ப்புகளும் கூடி வருகின்றன.

இந்த முறை, பாஜக இல்லாத அதிமுகவுடன் கூட்டணி வைக்க, விசிக, கம்யூனிஸ்ட்கள் தயங்காது என்கிறார்கள்.. இந்த லிஸிட்டில் காங்கிரசும் இணைந்துள்ளதாக சொல்கிறார்கள்..

How many Seat is TN Congress going to get and What is DMK MK Stalin going to do the Next

கூட்டணி: அதாவது, திமுக கூட்டணியை விட்டுவிடக்கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தாலும்கூட, மற்ற காங்கிரஸ் சீனியர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்களாம்.. 20 சீட் வரை காங்கிரசுக்கு ஒதுக்க அதிமுகவும் ஓகே சொல்லிவிட்டதாம்.. இப்படி கூடுதல் சீட் பெறுவதுடன், ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்று காங்கிரஸ் கணக்கு போட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

விஜயதாரணி: அதற்கேற்றவாறு, கடந்த தேர்தலில் திமுகவிடம் பெறப்பட்ட தொகுதிகளை காட்டிலும் இந்த முறை குறைத்து வாங்கமாட்டோம் என்று மாநில தலைவர் அழகிரியும் கறாராக சொல்லி வருகிறார். இதே கருத்தைதான், விஜயதரணி எம்எல்ஏவும் கூறியிருக்கிறார்..

அத்துடன், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளையும் அழகிரி தீவிரப்படுத்தியிருக்கிறார்.. குறிப்பாக, கன்னியாகுமரி, கரூர், விருதுநகர், ஆரணி, சிவகங்கை, உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் மறுபடியும் திமுகவிடம் கேட்டு வாங்கும் என்று தெரிகிறது.

ஆனால், இந்த முறை சேலத்தையும் கேட்டு வாங்க போகிறதாம் காங்கிரஸ்.. காரணம், மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தன்னுடைய மகன் கார்த்திக்குக்கும் சீட் கேட்டு வருகிறாராம். எனவே, சேலத்தில் ஒரு தொகுதி வேண்டும் என்று அவர் தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

பீட்டர் அல்போன்ஸ்: அதேபோல, சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் முடிவடைவதால், அவரும் சீட் கேட்டு பெறுவதில் தீவிரமாக இருக்கிறாராம்.. மூத்த தலைவரும், மிகச்சிறந்த பேச்சாளருமான பீட்டர் அல்போன்ஸ், மீண்டும் டெல்லிக்கே செல்வதுதான் சரியாக இருக்கும் என்று கட்சியும் நினைக்கிறதாம். அதனால், இவருக்கும் சீட் கன்பார்ம்டு என்கிறார்கள். அதேபோல 2 புது முகங்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கேட்டிருக்கிறார்களாம்.

கடந்த முறை, 9 சீட்டுக்களை திமுக தரப்பில் ஒதுக்கியதில், தேனியை தவிர்த்து மற்ற 8 இங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறை தேனியையே மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கினாலும், சேலம் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் கடந்த முறையே 9 சீட்டை பெற்றுள்ளதால், இந்த முறை 10-க்கும் குறையாமல் சீட்டுக்களை பெற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் உள்ளதாம்..

பேச்சுவார்த்தைகள்: எனினும், திமுக என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை.. கடந்த முறை, காங்கிரசுடன் முதலிலேயே பேச்சுவார்த்தை நடத்தி, எடுத்த எடுப்பிலேயே 10 சீட்டுக்களை லம்ப்பாக ஒதுக்கிவிட்டது திமுக. இதற்கு பிறகு, கூட்டணியில் இணைந்த கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்க முடியாமல், உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கி, அவர்களை போட்டியிடும்படி செய்தது.

ஆனால், இந்த முறை, காங்கிரசுக்கு 10 சீட்டுக்களை ஒதுக்குமா? என்று தெரியவில்லை.. திமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு விரைவில் அமைக்கப்படும் என தெரிகிறது. இந்த குழு முதலில் முஸ்லீம் லீக் கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, அந்த கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கக்கூடும்.

பிறகு, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.. காங்கிரஸின் எதிர்பார்ப்புகள் நிறைய இருப்பதாலும், எப்படியும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் இருக்கும் என்பதாலும், அநேகமாக கடைசியாகவே திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு பேசும் என்று தெரிகிறது.

ராகுல் காந்தி: அதேசமயம், காங்கிரஸ் தரப்பினரிடையே இன்னொரு கோரிக்கையும் வலுத்து வருகிறது.. தேசிய அளவில், பலம்கொண்ட பாஜகவை எதிர்க்க போவது, ராகுல் காந்தி என்பதால், தமிழகத்தில் ராகுல் காந்திக்கான ஆதரவு அலை நிறையவே உள்ளது.. எனவே, ஓட்டுபோடுபவர்கள் பலரும் ராகுல் காந்திக்காகவே ஓட்டு போடுவார்கள் என்பதால், இந்த முறை 15 சீட்டுக்களுக்கு மிகாமல் திமுகவிடம் கேட்டு பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்களாம்.

இப்படி காங்கிரசுக்கு ஆதரவான கருத்துக்களும், விமர்சனங்களும், யோசனைகளும் பல வலம் வந்தாலும், க்ளைமேக்ஸில் திமுக என்ன முடிவெடுக்க போகிறதென்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+