"மொத்தம் 1.4 கோடி பேர்".. தமிழகத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் எத்தனை பேர்? முழு டேட்டா
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்? திமுக, அதிமுகவில் தெலுங்கு பேசும் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு சீட் வழங்கப்ட்டுள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. வரும் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வழக்கம்போல் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தெலுங்கு பேசும் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
33.4 சதவீதம் பேர் தெலுங்கு சமுதாயம்
அதாவது கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அப்போது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 33.4% பேர் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி பெல்ட்டை தவிர பிற மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். இந்த இடங்களில் ஒவ்வொரு 3 வாக்காளர்களில் ஒருவர் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவராக உள்ளார்.
1.40 கோடி வாக்காளர்கள்
இன்னும் சில புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு பிறகு தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.6 கோடியாக உள்ளது. இதில் ஏறத்தாழ 1.4 கோடி பேர் தெலுங்கு பேசும் மக்கள் வாக்காளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் பிரதான கட்சிகளாக இருக்கும் ஆளும் திமுக, எதிர்க்கட்சியாக திமுக தொடர்ந்து தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வேட்பாளர்களாக நிறுத்தி வவருகிறது.
தெலுங்கு வேட்பாளர்கள் எத்தனை பேர்?
இந்த முறையும் கூட தமிழக அரசியல் களத்தில் திமுக 234 தொகுதிகளில் 164ல் நேரடியாக போட்டியிடுகிறது. இதில் 17 தொகுதிகளில் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் 169 தொகுதிகளில் அதிமுக களமிறங்கி உள்ளது. இதில் 22 பேர் தெலுங்கு சமுதாயத்தை சேர்ந்தவர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
திமுகவை எடுத்துக் கொண்டால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தெலுங்கு பேசும் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதேவேளையில் அதிமுக மாற்று பிளானை எடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக உள்ளனர். இந்த பகுதிகளை குறிவைத்து அதிமுக தெலுங்கு சமுதாய வாக்காளர்களை களமிறக்கி உள்ளது.
திமுகவில் 3 அமைச்சர்களுக்கு பொறுப்பு
பொதுவாக தமிழகத்தில் தெலுங்கு பேசும் மக்கள் திமுக, அதிமுகவின் ஓட்டு வங்கியாக உள்ளனர். இந்நிலையில் தான் தெலுங்கு சமுதாய மக்களின் வாக்குகளை கொத்தாக அறுவடை செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார். இதற்காக 3 அமைச்சர்களை அவர் களமிறக்கி உள்ளார்.
எவ வேலு (நாயுடு), கேஎன் நேரு (ரெட்டி), சேகர் பாபு (நாயுடு) என 3 அமைச்சர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலுவை வைத்து திருவண்ணாமலை, வேலூர் மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் தெலுங்கு சமுதாய மக்களின் வாக்குகளை கட்சிக்கு கொண்டு வரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவிடம் திருச்சி, நாகப்பட்டினம், சிதம்பரம் மற்றும் பிற டெல்டா பகுதிகளில் உள்ள தெலுங்கு வாக்காளர்களை ஓட்டுகளை அறுவடை செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் சென்னை தொகுதிகளில் உள்ள தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளை ஈர்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications