ஒரு பாம்பு எத்தனை முறை மனிதர்களை தீண்டும்? விடாத கட்டுவிரியன்! ஆக்ரோஷ கண்ணாடி விரியன்! எது மோசம்?
சென்னை: ஒரு பாம்பு எத்தனை முறை மனிதர்களை தீண்ட முடியும் என்பது தெரியுமா? அது போல் நல்லப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் பாம்புகளில் எதில் விஷத்தன்மை அதிகம் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் நமசிவாய மூர்த்தி சதாசிவம் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு பாம்பால் எத்தனை முறை மனிதர்களை தீண்ட முடியும்? அப்படி தீண்டிய பின்பு நஞ்சு திரும்பச் சுரப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்? - என என்னிடம் பலர் கேட்டுள்ளனர். அதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

நச்சுப்பைகள்: நஞ்சுள்ள பாம்புக்கு இரு நச்சுப்பைகள், அதன் வாயின் உட்புறம் மேல் தாடையில் கண்களுக்கு பின்னால் அமைந்துள்ளன. இதிலிருந்து மேல் தாடையில் இருபக்கமும் உள்ள இரு நச்சுப் பற்கள் நச்சு நாளங்கள் மூலம் இணைந்து உள்ளன.
பாம்பு நஞ்சு என்பது புரோட்டீன் மற்றும் பல்வேறு விதமான என்சைம்களின் கலவையாகும். பாம்பு தீண்டும் போது அதன் நச்சுப் பற்களின் வழியாக நஞ்சை இரைகளின் மீது உட்செலுத்தி அவற்றை செயலிழக்க செய்கின்றன.
இவ்வாறு நஞ்சை செலுத்தி இரையை செயலிழக்கச் செய்வது பிடிக்கப்படும் இரை எதிர்த்தாக்குதல் செய்ய இயலாமல் அதனை செயலிழக்கச் செய்வதற்கே!
பின்னர் இரை விழுங்கப்படும் போது இந்த நஞ்சு இரையை விரைவில் செரிக்கச் செய்கிறது. இரையின் அளவைப் பொறுத்து பாம்பு இரையை கொல்லத் தேவையான அளவு மட்டுமே நஞ்சை செலுத்துகின்றன!
முழு இரை: பொதுவாக அவை முழு இரை எடுத்த பின்னர் ஒருமாதம் வரையிலும் கூட அடுத்த இரை எடுக்காமலிருக்கும் !. பாம்புகள் தனது இரையையோ மனிதர்களையோ தீண்டும்பொழுது செலுத்தப்படும் நஞ்சின் அளவு அதன் நச்சுப் பையில் தேங்கி உள்ள நஞ்சின் அளவில் மிகவும் சிறிதளவே.

எனவே ஒரு நஞ்சுள்ள பாம்பு ஒருநாளில் பலமுறை அடுத்தடுத்து தீண்டினாலும் நஞ்சைச் செலுத்த இயலும்!
கண்ணாடி விரியன் பாம்பு ஒருவரை மிக ஆக்ரோஷத்துடன் தீண்டி , தீண்டிய இடத்திற்கு அருகில் 2 அங்குலம் தள்ளி மீண்டும் அப்போதே தீண்டியதை நான் அறிவேன். இவை நல்லப் பாம்பு, கட்டுவிரியன் ஆகியனவற்றை விட மிக அதிகமான நஞ்சைச் செலுத்துகின்றன!
கட்டுவிரியன் பாம்புகள் சில தீண்டல்களின் போது தீண்டியதும் தீண்டிய இடத்தை விடாது பற்றி மீண்டும் மீண்டும் தனது வாயை மென்று(Chew) அதிகப்படியான நஞ்சை தொடர்ந்து செலுத்துகின்றன.
விடாது கவ்வும்: இவ்வாறு மறுமுறையும் தீண்டுவது அல்லது தீண்டிய இடத்தை விடாது கவ்விப் பற்றி தொடர்ந்து அதிக நஞ்சை செலுத்துவது ஆகியன பெரும்பாலும் பாம்பை தெரியாமல் மிதித்திருந்த போதே நிகழ்கின்றன.
மேலும் மனிதர்கள் மீது நஞ்சுள்ள பாம்பின் தீண்டல்களில் சுமார் 25% அளவு தீண்டல்கள் நஞ்சு செலுத்தப்படாத உலர் தீண்டலாக (Dry Bites) அமைகின்றன. இது அச்சுறுத்தி நம்மை அகலச் செய்வதற்காகவே என கருதப்படுகிறது!
கோடை மற்றும் மழைக் காலங்களில் பாம்புகள் அதிக அளவிலும் வீரியம் மிக்க நஞ்சை உற்பத்தி செய்கின்றன.எனவே இக்காலங்களில் பாம்புத் தீண்டல் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளன.
நஞ்சு சேகரிக்க: பாம்பு பண்ணைகளில் பாம்பு நஞ்சு சேகரிக்க (Milking of Venom) பாம்பின் வாயைத் திறந்து அதன் நச்சுப் பற்களை ஒரு கோப்பையின் மேல் கட்டப்பட்ட ரப்பர் ஷீட் மீது வைத்து அழுத்தி இந்த நஞ்சு கோப்பையில் சேகரிக்கப்படும்.
இதேபோல் அடுத்த 15-வது நாள் மீண்டும் அதே பாம்பிடமிருந்து நஞ்சு எடுப்பார்கள். சேகரிக்கப்படும் நஞ்சில் 10% அளவு எதிர்வினை நஞ்சு (Anti Venom) தயாரிக்கவும், 90% நஞ்சு பல்வேறு மருந்துப் பொருட்கள் தயாரிப்பிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறன.
15 நாட்களில் மீண்டும் நஞ்சு: எனவே நஞ்சு எடுத்த 15 நாட்களில் நஞ்சு முழு அளவில் சுரந்து அதன் நஞ்சுப் பை மீண்டும் நிரம்பிவிடும் என் கருதலாம்! வளர்ந்த பாம்புகள் அதன் நஞ்சுப் பையிலிருந்து சுமார் 45 % வரையிலான நஞ்சை முதலாவது தீண்டலின்போதே வெளியேற்ற இயலும். இருப்பினும் செலுத்தும் நஞ்சின் அளவை வளர்ந்த பாம்புகள் கட்டுப்படுத்த இயலும். இரையை செயலிழக்கச் செய்ய தேவையான அளவு நஞ்சை மட்டுமே தீண்டலின்போது செலுத்துகின்றன!
9 பேர் பலி: தென் ஆப்ரிக்காவில் இரவில் வீட்டிற்குள் நுழைந்த ஒரு பிளாக் மாம்பா எனும் கொடிய நஞ்சுள்ள பாம்பு அந்த இரவில் வீட்டில் ஒன்பது நபர்களை அடுத்தடுத்து தீண்டி அவர்கள் அனைவருமே இறந்தனர் என முன்னர் ஒருமுறை நேஷனல் ஜியோகிராபி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்தனர்! இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications