அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் எவ்வளவு கூடியுள்ளது? 1000 யூனிட்டிற்கு மேல் எவ்வளவு?
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 4.83 சதவிகிதம் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வின் படி அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு யூனிட்டிற்கு எவ்வளவு கூடியுள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த இணைப்புகளுக்கு மின் விநியோகம் செய்யும் பணியை மின்வாரியம், மின் உற்பத்தி - பகிர்மான கழகம் , மின் தொடரமைப்பு கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் தொடர் இழப்புகளை சந்தித்து வருகிறது.

ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் உள்ளது. இத்தகைய சூழலில் கடந்த 2022- ஆம் ஆண்டு மின்கட்டணம் 30 % மேல் உயர்த்தப்பட்டது. அது மட்டும் இன்றி 2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து இருந்தது.
இந்த உத்தரவின் படி கடந்த ஆண்டு வீடுகளுக்கு 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. ஆனாலும். வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த ஆண்டும் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ. 8.15-ல் இருந்து ரூ.8.55 ஆக உயர்வு.
* ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.8.15-ல் இருந்து 8.55 ஆக உயர்வு.
* தாட்கோ நிறுவனங்களுக்கு மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.9.35ல் இருந்து ரூ.9.80 ஆக உயர்வு.
* 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.10.20 காசுகளாக இருந்த கட்டணம் ரூ.10.70 ஆக உயர்வு.
* 1000 யூனிட்டிற்கு மேல் ஒரு யூனிட்டிற்கு ரூ.11.25 காசுகளாக இருந்த கட்டணம் ரூ.11.80 ஆக உயர்வு.












Click it and Unblock the Notifications