அரசு ஊழியர்களுக்கு ஒரேடியாக எகிறும் சம்பளம்.. அடேங்கப்பா எவ்வளவு தெரியுமா.. வெளியான ஹேப்பி நியூஸ்
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஜாக்பாட் வரப்போவதாக, தெரிகிறது.. அதன்படி மத்திய அரசின் ஊழியர்கள் நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வை விரைவில் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, அது 2016ல் அமலுக்கு வந்தது. அந்தவகையில், எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

பரிந்துரை: தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெற்றுவருகிறார்கள்... ஆனாலும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் சொல்லி வருகிறார்கள்.. எனவேதான், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுவிட்டால், புதிய ஆணையம் பலவேறு மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியர்கள்: இதனிடையே, 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரப்போவதாக மீண்டும் ஒருமுறை தகவல் வெளியாகி உள்ளது.. வழக்கமாக, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.. இந்த புள்ளிகள், ஏறுமுகமாக இருந்தால், அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும்.. இந்த புள்ளிகள் தற்போதுதான் வேகமாக உயர தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக, கடந்த ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் வரை அதிகரித்து, இப்போது 134.2 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாதத்திற்கான புள்ளிகள் இனி வரஉள்ள நிலையில், அதனை கணக்கில் கொண்டே, அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது..
கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 46% ஆக உயரும். இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவிகிதமாக உள்ளது. அகவிலைப்படி உயர்வின் பலனை, ஒரு கோடி ஊழியர்கள் உட்பட ஓய்வூதியதாரர்கள் பெறப்போவதாக சொல்கிறார்கள்.
அக்டோபர் மாதம்: அதேபோல, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு கணக்கீடு செய்யப்பட்டு இறுதி முடிவு வெளியாகும் என்று ஊதிய குழு வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி வருகிறது..
எனவே, 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதங்கள் உயர்த்தப்பட்டு 46 சதவீத வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கூடிவருகிறது.. அகவிலைப்படி உயர்ந்தால், அவர்களுக்கான அடிப்படை சம்பளமும் உயர்த்தப்படும் என்பதால், நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் எப்போது வெளியாகும் என்று ஊழியர்கள் காத்திருப்பில் உள்ளனர்.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் நிலையில், அரசு ஊழியர்களின் மனங்களை மேலும் குளிரவைக்க, 8வது ஓய்வூதிய குழுவை அமைத்து அதிரடியை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எதிர்பார்ப்பு: அநேகமாக ரக்ஷாபந்தனை ஒட்டி, இந்த அகவிலைப்படி உயர்வுக்கான அதிகரிப்பு வெளிவரும் என்கிறார்கள்.. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் அரசு சார்பில் வரவில்லை.












Click it and Unblock the Notifications