உங்கள் ஊர் தாசில்தாருக்கு இத்தனை ஆயிரம் சம்பளமா? விஏஓ நினைத்தால் இதை செய்யலாமா? அரசின் சூப்பர் சலுகை
சென்னை: தமிழக வருவாய் துறையின் முதுகெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் பதவிகள் தமிழக மக்களின் வாழ்வோடு மிக நெருங்கிய தொடர்புடையவை ஆகும்.. இதில் கிராம நிர்வாக அலுவலர் எனப்படும் விஏஓ பதவிதான் அடிமட்ட அளவில் மக்களுக்கான முதல் சேவையை முதன்மையாக வழங்குகிறது என்றே சொல்லலாம்.. அந்தவகையில் விஏஓக்களின் பணிகள், சம்பளம் உள்ளிட்டவற்றை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
விஏஓ பதவிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.. ஒரு விஏஓ தனது ஆளுகைக்கு உட்பட்ட கிராமத்தின் நில ஆவணங்களைப் பராமரிப்பது, சாதிச் சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் போன்றவற்றுக்கு முதற்கட்டப் பரிந்துரை செய்வது, கிராமத்தில் நடக்கும் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்வது எனப் பல பணிகளை மேற்கொள்கிறார்..

விஏஓ அல்லது கிராம நிர்வாக அலுவலர்
குறிப்பாக இயற்கை சீற்றங்கள் நிகழும்போது சேத மதிப்புகளைக் கணக்கிட்டு அரசுக்குத் தெரிவிப்பதில் இவருடைய பங்கு மிக முக்கியமானது..
இவருக்கான ஆரம்பக்கட்ட ஊதியம் சுமார் 20 ஆயிரத்துக்கு மேல் தொடங்கி படிகளுடன் சேர்த்து கணிசமான தொகையாக வழங்கப்படுகிறது.. காலப்போக்கில் பணி அனுபவம் மற்றும் துறைசார் தேர்வுகள் மூலம் இவர் வருவாய் ஆய்வாளராகவும் பிறகு வட்டாட்சியராகவும் பதவி உயர்வு பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன..
தாசில்தார் சம்பளம்
இதற்கு அடுத்த நிலையில் மிக அதிக அதிகாரங்கள் கொண்ட பதவியாக வட்டாட்சியர் எனப்படும் தாசில்தார் பதவி விளங்குகிறது.. ஒரு தாலுகா அல்லது வட்டத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக வட்டாட்சியர் செயல்படுகிறார்.. இவர் ஒரு நீதிபதியை போல சில அதிகாரங்களை கொண்டவர் என்பதால் நிர்வாக நடுவர் என்றும் அழைக்கப்படுகிறார்..
நில பிரச்சனைகளை தீர்ப்பது, பட்டா மாறுதல் வழங்குவது, அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வது போன்றவை இவரது முக்கியப் பணிகளாகும்.. தேர்தல் காலங்களில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் இவர் செயல்படுகிறார்.
புரமோஷன்கள்
விஏஓ பதவி உயர்வு மூலமாகவோ அல்லது குரூப் 2 போன்ற தேர்வுகள் மூலம் நேரடியாகவோ இந்த போஸ்டிங்குக்கு பதவிக்கு வரலாம்.. வட்டாட்சியரின் ஊதியம் என்பது ஆரம்பத்திலேயே 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்து அனுபவத்திற்கு ஏற்ப பல மடங்கு அதிகரிக்கும்.. இவருடைய பணிக்காலம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் வருவாய் கோட்டாட்சியர் போன்ற உயர் பதவிகளுக்கு செல்லவும் சான்ஸ்கள் உண்டு..
இந்த இரண்டு பதவிகளுமே கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் மிக உயரிய இடங்களாகும்.. ஒரு சாதாரண ஏழை எளிய மனிதர் தனது நிலம் சார்ந்த தேவைகளுக்கோ அல்லது வாழ்வாதார சான்றிதழ்களுக்கோ முதலில் விஏஓ அலுவலகத்தைத்தான் அணுகுகிறார்
அதிகார வரம்புகள்
அதேபோல அந்தப பகுதியில் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு சிக்கலோ அல்லது அரசு நிலம் ஆக்கிரமிப்போ நடந்தால் வட்டாட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறார்..
அதிகார வரம்பை பொறுத்தவரை விஏஓ கிராம அளவிலும் வட்டாட்சியர் தாலுகா அளவிலும் ஆளுமை செலுத்துகிறார்கள்.. இவர்களுக்கு வழங்கப்படும் அரசு ஊதியம் என்பது அவர்களின் பொறுப்பு மற்றும் பணிச்சுமைக்கு ஏற்றவாறு தகுந்த முறையில் அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.. நேர்மையான முறையில் மக்கள் பணியாற்றுபவர்களுக்கு இந்த பதவிகள் சமூகத்தில் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றுத் தருகின்றன..!!!












Click it and Unblock the Notifications