உங்களுக்கு 30 வயசு ஆகிடுச்சா? ரிடையர் ஆன பிறகு.. ராஜா மாதிரி வாழ இதை மட்டும் செய்யுங்க போதும்!
சென்னை: காலம் முழுக்க ஓடி ஓடி உழைத்தாலும் தனியார் துறையில் வேலை செய்வோருக்கு ஓய்வூதியம் என்பது நிச்சயமில்லை. இந்த பிரச்சினையைத் தீர்க்கவே அரசு என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. ஓய்வு பெற்ற பிறகு மாதம் 2 லட்ச ரூபாய் ஓய்வூதியத்தைப் பெற மாதம் நாம் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
கல்லூரி காலத்தை முடித்தவுடன் உழைக்க ஆரம்பித்தால் 60 வயது வரை ஓயாமல் உழைத்துக் கொண்டு இருப்போம். இந்த காலத்தில் நமக்கு ரிலாக்ஸ் செய்யக் கூட பெரியளவில் டைம் கிடைக்காது.

ஓய்வு பெற்ற பிறகு நமக்கு டைம் இருந்தாலும் பணத்தைச் சம்பாதிக்க முடியாது. நிலையான வருமானம் கிடைக்காது. அதேபோன்ற நேரங்களில் நாம் ஓய்வூதியத்தைப் பெரியளவில் நம்பி இருப்போம்.
முதலீடு: தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் நமக்கான ஓய்வூதியத்தைச் சேமிக்கலாம். இந்தத் திட்டம், தனிநபர்களை நீண்ட காலத்திற்குச் சேமிக்கவும், முறையாக முதலீடு செய்யவும் ஊக்குகிறது. இதன் மூலம் ஓய்பு பெற்ற பிறகும் நமக்கு நிதி சுதந்திரம் இருக்கும்.
சரி விஷயத்திற்கு வருவோம். இப்போது உங்களுக்கு 30 வயதாகிறது என வைத்துக் கொள்வோம். உங்களுக்கு ஓய்வூதியமாக மாதம் 2 லட்சம் ரூபாய் தேவை என்றால் இப்போது முதல் நீங்கள் மாதம் எவ்வளவு தொகையை இந்த என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எவ்வளவு: 30 வயது முதல் 65 வயது வரை 30 ஆண்டுகள் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்த காலகட்டத்தில் சுமார் 12% லாபம் வருகிறது என வைத்துக் கொள்வோம். அதன்படி பார்த்தால் மாதம் 15,500 ரூபாய் இந்தத் திட்டத்தில் நாம் போட்டால் போதும்.. 65 வயதாகும் வரை தொடர்ச்சியாக இதைச் செய்தால் போதும். அதன் பிறகு உங்களுக்கு மாதம் மாதம் ஓய்வூதியமாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் கிடைக்கும். இதுதான் என்பிஎஸ் திட்டத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட்டாகும்.
வரி விலக்கு: இது மட்டுமின்றி என்பிஎஸ் திட்டத்தின் மூலம் நாம் செய்யும் முதலீடுகளில் வரி விலக்கையும் நம்மால் பெற முடியும். பிரிவு 80 CCD(1) இன் கீழ் சம்பளத்தில் 10% வரை வரி விலக்கு பெறலாம். பிரிவு 80 சிசிஇ கீழ் ரூ 1.50 லட்சம் வரை விலக்கு பெற முடியும். மேலும், பிரிவு 80 CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 வரை வரி விலக்கு நமக்கு கிடைக்கும்.
வல்லுநர்கள்: இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், “தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வூதிய சேமிப்புகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசின் ஒரு முயற்சியாகும். உங்களுக்கு வரி பலன்களை அளிக்கும் அதே நேரம் உங்கள் ஓய்வூதியத்தையும் இது உறுதி செய்கிறது. எப்போதும் நீண்ட கால முதலீடு செய்யும் போது compounding அதாவது கூட்டு வட்டி ஒரு மேஜிக் செய்யும். அதாவது நாம் குறைந்த தொகையை முதலீடு செய்தாலும் போதும் அது மிகப் பெரிய ரிட்டர்னை நமக்கு தரும். இதுவே இதிலும் நடக்கிறது" என்கிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications