பிஎப் இல் உங்களுக்கு எவ்வளவு பென்சன் கிடைக்கும்? மாத சம்பளம் வாங்குறீங்களா.. புதிய கால்குலேசன்!
சென்னை: EPFO இல் அதிக பென்சன் திட்டத்தின்படி பலரும் தற்போது விண்ணப்பித்து வருகிறார்கள். இதன்படி இனி உங்களுக்கு எவ்வளவு பென்சன் கிடைக்கும் என்பதை பாருங்கள். இதற்கு இபிஎப்ஓ வெளியிட்டுள்ள கால்குலேசன் என்ன என்பதை பாருங்கள்.
மாத சம்பளம் வாங்குவோருக்கு வாழ்க்கையின் முக்கியமான சேமிப்பு திட்டம் என்றால் அது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செயல்படுத்தி வரும் பிஎப் பென்சன் திட்டம் தான். இந்த திட்டத்தின் படி வருங்கால வைப்பு நிதியின் வாடிக்கையாளர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு (Higher Pension) செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

அதன்படி மாத சம்பளம் வாங்குவோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உண்மையான சம்பளத்தின் அடிப்படையில் அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, அவர்களுக்கு உயர் ஓய்வூதியம் (Higher Pension) எவ்வாறு கணக்கிடப்படும் என்பது குறித்து EPFO ஒரு அறிவிப்பில் தெரிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின்டி படி, செப்டம்பர் 1, 2014-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும், இந்தத் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் உயர் ஓய்வூதியக் கணக்கீடு வித்தியாசம் இருக்கும்.
தகுதியான விண்ணப்பதாரர் செப்டம்பர் 1, 2014-க்கு முன் EPF கணக்கு திறக்கப்பட்டிருந்தால், அதிக ஓய்வூதியம் ஓய்வு பெறும் தேதிக்கு 12 மாதங்களுக்கு முன் கணக்கிடப்படும். அதாவது, ஓய்வூதிய நிதியிலிருந்து வெளியேறுவதற்கு 12 மாதங்களுக்கு முன் ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு, ஓய்வு பெறும் தேதிக்கு முந்தைய 60 மாத சேவை பங்களிப்புக் காலத்தின் சராசரி ஊதியத்தை கணக்கில் கொண்டு அதிக ஓய்வூதியம் கணக்கிடப்படும். அதேநேரம் செப்டம்பர் 1, 2014-க்கு பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு குறைந்த ஓய்வூதியத்தை மட்டுமே பெறுவார்கள்.
இந்த நிலையில் இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது. ஒருவருக்கு ஓய்வூதியம் 60 மாத சராசரி சம்பளம் X சேவை காலத்தை 70 ஆல் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. பணியாளரின் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் சராசரி ஊதியம் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக நீங்கள் அக்டோபர் 2007 இல் இபிஎஸ் திட்டத்தில் சேர்ந்தீர்கள், உங்கள் ஓய்வு செப்டம்பர் 2033 இல் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். இங்கே, உங்களின் சேவை காலம் 25 ஆண்டுகள் (செப்டம்பர் 2033 - அக்டோபர் 2008). ஓய்வூதிய கணக்கீட்டிற்கான சராசரி சம்பளம் கடைசி ஆண்டுகளில் (60 மாதங்கள்) உங்களின் சராசரி ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
அதேநேரம் அதிக ஓய்வூதியத்தை விரும்புவோருக்கு, அதிக ஓய்வூதியத்தை கணக்கிட முழு சம்பளம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, அலவன்ஸ் போன்றவை அடிப்படை சம்பளத்துடன் கணக்கிடப்படுகிறது. ஜூன் 26, 2023க்குள் EPF கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.

அதிக ஓய்வூதியத்தை நீங்கள் தேர்வு செய்யாவிட்டால் என்ன நடக்கும்? அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் பிஎல்-ல் சேமிப்பிற்கு பதில் உங்கள் ஓய்வூதியம் அதிகமாக இருக்கும். ஆனால் நீங்கள் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யவில்லை என்றால், உங்களுக்கு பிஎப் தொகை ஓய்வு பெறும் போது பெரும் தொகை கிடைக்காமல் போகும்.
அதேநேரம் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் நபர்களுக்கு, EPFOவின் அதிக பென்சன் திட்டத்தின் படி விண்ணப்பிப்பது புத்திசாலித்தனமான யோசனையாக இருக்காது என்கிறார்கள். ஏனெனில் அதிக ஓய்வூதியத் தகுதி என்பது 10 வருட வேலை செய்திருக்க வேண்டும், அப்படி வேலை செய்தவர்களுக்கு 58 வயதிற்குப் பிறகு மட்டுமே அதிக பென்சன் வழங்கப்படும். அதே நேரம் வரி இல்லாமல் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications