என்னங்க.. இவ்வளவு கம்மியா இருக்கு? 1983ல் உலககோப்பை வென்ற இந்திய வீரர்களின் சம்பளம் என்ன தெரியுமா?
சென்னை: ஐசிசி உலககோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தான் கடந்த 1983ல் இந்தியா உலககோப்பை வென்றபோது அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. 2019ல் நடந்த உலககோப்பை போட்டியில் இந்தியா அரையிறுதியில் வெறியேறிய நிலையில் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் தான் இந்த முறை இந்தியாவில் ஐசிசி உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மொத்தம் 10 மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டி நடைபெறும் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி உலககோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் 5ம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் மைதானத்தில் விளையாட உள்ளன. இந்தியா தனது அக்டோபர் 8 ம் தேதி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. நவம்பர் 19ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
உலககோப்பை போட்டி நம் நாட்டில் நடைபெற உள்ளது. இதனால் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அனைவரும் எதிர்ப்பார்க்கின்றனர். இந்நிலையில் தான் இந்தியா முதல் முறையாக கடந்த 1983ம் ஆண்டில் தான் ஐசிசி உலக கோப்பையை வென்ற நிலையில் அப்போது வீரர், வீரர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றிய முக்கிய தகவல் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதாவது 1983 என்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாகும். ஏனென்றால் அந்த சமயத்தில் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்த முடியாத பலம் வாய்ந்து இருந்தது. இதனால் சாட்சி கூற வேண்டும் என்றால் கிரிக்கெட்டுக்காக நடத்தப்பட்ட முதல் 2 உலககோப்பையை அந்த அணி தான் வென்று இருந்தது.
அதன்பிறகு 1983ல் நடந்த உலககோப்பை போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் பைனலுக்கு முன்னேறிய நிலையில் அந்த அணியை தோற்கடித்து இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தான் இந்தியா உலககோப்பையை உச்சி முகர்ந்தது.
அப்போது இந்திய கேப்டனாக கபில் தேவ் இருந்தார். மேலும் ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், யஷ்பால் ஷர்மா, ரோஜர் பின்னி, சயீத் கிர்மானி, பல்விந்தர் சந்து, கிர்த்தி ஆசாத், மதன் லால், ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டீல், சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்கர், சுனில் வால்சன் உள்ளிட்டோர் அணியில் இடம்பிடித்து இருந்தனர்.
இந்த படையின் உலககோப்பை சாம்பியன் பட்டம் தான் இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை பிரபலமடைய செய்ய முக்கிய காரணம் என்றால் மிகையல்ல. இந்நிலையில் தான் 1983ல் உலககோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் என்ன என்று யோசித்து இருக்கீர்களா?.
அதாவது 1983 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணிக்கு போட்டியில் ஒரு நாளுக்கான கொடுப்பனவு (Allowance) என்பது ரூ.200 ஆக இருந்தது. அதேநேரத்தில் ஒரு போட்டிக்கான சம்பளமாக ரூ.1500 வழங்கப்பட்டுள்ளது.இப்போது இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாக உள்ள ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்களுக்கும் லட்சம் முதல் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது.
அதனை ஒப்பிடும்போது கபில் தேவ் தலைமையில் 1983ல் உலககோப்பை வென்ற இந்திய அணி வீரர்களின் சம்பளம் என்பது மிகமிக சொற்ப தொகையாகும். மேலும் 1983க்கும் பிறகு 28 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி 2011 உலககோப்பையை வென்றது. அப்போது டோனி தலைமையிலான இந்திய அணிக்கு வெகுமதியாg பணம் மற்றும் ரியல்எஸ்டேட் ரிவார்ட்ஸ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரர்களுக்கும் பிசிசிஐ சார்பில் ரூ.2 கோடி வழங்கப்பட்டது.
முன்னதாக 2003ல் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அப்போதும் கூட இந்திய அணி வீரர்கள் பிசிசிஐ மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலம் தலா ரூ.70 லட்சத்தை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications