அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்!
சென்னை: ஈரான் - அமெரிக்கா போரில் இந்தியா எந்த பக்கம் நிற்க வேண்டும் என்று நிறைய குழப்பங்கள் நிலவி வருகிறது. தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு நெருக்கமாக பேசிய இந்தியா, ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்கவில்லை. பின்னர் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய பின் ஈரானுடன் இந்தியா சமாதானமாகி சென்றது. ஆனால் இந்த போருக்கு இடையே பாகிஸ்தான் சத்தமே இல்லாமல்.. அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது.
மத்திய கிழக்கில் போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஒரு பக்கம் வல்லரசு அமெரிக்கா, மறுபக்கம் விடாக்கண்டன் ஈரான். இரண்டுக்கும் நடுவே மாட்டிக்கொண்டோமோ என்று நினைக்காமல், இந்த நெருக்கடியைத் தனக்கான நெருக்கமான வாய்ப்பாக மாற்றப் பார்க்கிறது பாகிஸ்தான். இந்த போரில், பாகிஸ்தானுக்கு என்னென்ன ப்ளஸ் பாயிண்ட்கள்?

1. ஹார்முஸ் ஜலசந்தி: சிக்காத கப்பல்கள்!
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் செல்வதில் இப்போதும் சிக்கல் உள்ளது. ஆனால் இங்கே பாகிஸ்தான் கப்பல்கள் எளிதாக செல்கின்றன. உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயத்துடிப்பு 'ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ்' (Strait of Hormuz). போர் உச்சத்தில் இருப்பதால், பல நாடுகளின் கப்பல்கள் அங்கு தத்தளிக்கின்றன. ஆனால், ஈரானுடன் சகோதரத்துவ உறவைப் பேணும் பாகிஸ்தானுக்கு ஒரு ஸ்பெஷல் பாஸ் உண்டு. ஈரானின் கடல் எல்லையைப் பயன்படுத்தி, பெரிய தடங்கல்கள் இன்றி எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முயன்று வருகிறது. அமெரிக்காவுடன் மோதாத, அதேசமயம் ஈரானை பகைக்காத பாகிஸ்தானின் இந்த 'Double Game' அவர்களுக்கு எரிபொருள் பாதுகாப்பைத் தருகிறது.
2. கிடப்பில் கிடந்த குழாய்... இப்போ 'கெத்து' காட்டுது!
பல ஆண்டுகளாக அமெரிக்கத் தடைகளால் முடங்கிக் கிடந்த 'ஈரான் - பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டம்' (IP Pipeline) இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது. கடல் வழி ஆபத்தானது என்பதால், தரைவழியாக ஈரானிடம் இருந்து எரிவாயுவைப் பெறுவது பாகிஸ்தானுக்குப் பெரும் நிம்மதி. போர்ச் சூழலைப் பயன்படுத்தி, தரைவழி எரிசக்திப் பாதையை உறுதிப்படுத்துவது இஸ்லாமாபாத்தின் மாஸ்டர் பிளான்!
3. 'உம்மா' பாசம்... உள்நாட்டு அமைதி!
பாகிஸ்தானில் கணிசமான அளவில் ஷியா பிரிவு மக்கள் உள்ளனர். ஈரான் மீதான தாக்குதல் பாகிஸ்தானுக்குள் மதரீதியான கொந்தளிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், பாகிஸ்தான் அரசு மிகத் தெளிவாக "நாங்கள் யாருடைய பக்கமும் இல்லை, அமைதி மட்டுமே முக்கியம்" என்று நடுநிலை வகிப்பதன் மூலம், தன் நாட்டுக்குள் வரக்கூடிய பெரிய உள்நாட்டுக் கலவரத்தைத் தடுத்துவிட்டது. இதற்காக இரண்டு நாட்டு உம்மாக்கள் மூலம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சனைகளை சரி செய்துள்ளது.
4. கரன்சி கஷ்டமும்... ஜே.டி. வான்ஸ் டீலும்!
பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு, இந்தப் போர் ஒரு 'பேரம் பேசும்' கருவியாக மாறியுள்ளது. அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம், குறிப்பாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தரப்பு, ஈரானை ஓரளவு கட்டுப்படுத்த பாகிஸ்தானின் ராணுவ உதவியை எதிர்பார்க்கிறது. "உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம், பதிலுக்கு எங்கள் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்கள்" என்கிற ரீதியில் பாகிஸ்தான் காய் நகர்த்தி வருகிறது.
5. பஞ்சாயத்த': உலகின் ஒற்றைப் பாலம்!
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பாகிஸ்தானின் 'மீடியேட்டர்' (Mediator) அவதாரம். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை கிடையாது. வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தான் ஈரானின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாகச் செயல்படுகிறது.
இன்று டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே ரகசியத் தகவல்களைப் பரிமாறும் ஒரே 'ஹாட்லைன்' இஸ்லாமாபாத் தான். ஒருபுறம் அமெரிக்க அதிபர் தரப்புடன் ரகசிய டீல், மறுபுறம் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் நட்பு என இரண்டு தரப்பையும் ஒரே மேசைக்குக் கொண்டுவரும் 'பஞ்சாயத்துக்காரர்' வேலையை பாகிஸ்தான் கச்சிதமாகச் செய்கிறது. இந்தப் போர் முடிவுக்கு வந்தால், உலக அரங்கில் பாகிஸ்தானின் ராஜதந்திர மதிப்பு பல மடங்கு உயரும் என்பதில் சந்தேகமே இல்லை!
-
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications