Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 மாநில சட்டசபை தேர்தல்.. சுருண்டு விழுந்து டக் அவுட் ஆன பவன் கல்யாண்! விஜய்க்கு போன முக்கிய மெசேஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கானாவில் ஜன சேனா கட்சியின் தோல்வி அரசியல் ரீதியாக இன்னிங்க்ஸை தொடங்க இருக்கும் நடிகர் விஜய் போன்றவர்களுக்கு பெரிய பாடமாக மாறி உள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் அதிரடி வெற்றியை பதிவு செய்து உள்ளது. கேசிஆரின் பிஆர் எஸ் கட்சி அங்கே 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அங்கே ஆட்சி அமைக்க 119 இடங்களில் 60 இடங்கள் போதும். இப்படி தெலுங்கானாவில் அதிரடியாக ஆடிய காங்கிரஸ்.. வட மாநிலங்களில் பாஜகவிடம் மண்ணை கவ்வி உள்ளது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மொத்தம் 8 இடங்களில் போட்டியிட்டது. இதுவரை தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் இரண்டிலும் இதுவரை எங்கும் ஜன சேனா கட்சி வென்றதே இல்லை.

அவர்களின் அரசியல் வரலாற்றில் இதுவரை போட்டியிட்ட எந்த இடங்களிலும் வெற்றிபெற்றதே இல்லை. டெபாசிட் வாங்கியதே இல்லை.

How Pawan Kalyan lost in Telangana is a big message for Actor Vijay politics in Tamil Nadu?

பவன் கல்யாண்: இந்த முறை தெலுங்கானா சட்டசபை தேர்தலில், கம்மம், கொத்குடெம், வைரா, அஸ்வராப்பேட்டை, குகட்பள்ளி, தந்தூர், கோடாட், நாகர்குர்னூல் ஆகிய தொகுதிகளில் ஜனசேனா போட்டியிட்டது. இதில் அனைத்து தொகுதிகளிலும் ஜன சேனா கட்சி படுதோல்வி அடைந்து உள்ளது. அதோடு 8 தொகுதிகளிலும் ஜன சேனா டெபாசிட் இழந்துள்ளது.

முக்கியமாக பவன் கல்யாண் குகட்பள்ளி, தந்தூர் மற்றும் கொத்குடெம் ஆகிய 3 தொகுதிகளில் பிரச்சாரம் செய்த போதிலும், ஜன சேனா இந்த தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இந்த தொகுதிகளில் எல்லாம் அதிகபட்சம் 3-4 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று ஜன சேனா படுதோல்வி அடைந்துள்ளது.

நடிகர் விஜய்க்கு பாடம்; இந்த தோல்வி அரசியல் ரீதியாக நடிகர் விஜய்க்கு பெரிய பாடமாக மாறி உள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் நுழைவதற்கு விஜய் தீவிரமான திட்டமிடல்களை வகுத்து வருகிறாராம். விஜய் அரசியல் ரீதியாக முக்கியமான சில திட்டங்களை வகுத்து வருகிறாராம். முக்கியமாக கொள்கை ரீதியாக தன்னுடைய கட்சி எப்படி இருக்க வேண்டும் என்றும் விஜய் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம்.

அம்பத்கார் பற்றி பேச்சு: விஜய் அரசியலுக்கு வருவதற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1.500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார். இதற்காக சென்னையில் தனியார் மகால் ஒன்றில் பிரம்மாண்ட கூட்டம் ஒன்றையும் நடத்தினார்.

இதுவும் கூட அரசியலை மனதில் வைத்தே அவர் செய்ததாக கூறப்பட்டது. விஜய் அரசியலில் அம்பேத்காரிசம் அதிகமாக இருக்கும் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் கூறுகின்றன. அவர் இதற்கான கொள்கைகளை வகுத்து வருவதாக தெரிகிறது.

( சுனிலை திருப்பி அனுப்பிய கமல்நாத்! அங்கே தொடங்கிய தோல்வி.. காங்கிரஸ் வீழ்ச்சிக்கு இப்படி ஒரு காரணமா?)

பாடம்: ஆனால் இப்போது ஜன சேனா கட்சியின் தோல்வி விஜய்க்கு அரசியல் ரீதியாக பின்வரும் பாடங்களை கற்பிக்க வாய்ப்புள்ளது.

1. பொதுவாக தெலுங்கு சினமா ரசிகர்கள் தமிழர்களை விட அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதிலும் பவன் கல்யாணுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.; ஆனால் அப்படிப்பட்ட பவன் கல்யாணுக்கே அரசியல் ரீதியாக பெரிய தோல்வி ஏற்பட்டு உள்ளது.

2. ஆந்திரா, தெலுங்கானாவில் நீண்ட காலமாக அரசியல் செய்து வந்தும் கூட.. டெபாசிட் பெறக்கூடிய அளவிற்கு கூட பவன் வெற்றிபெற முடியாதது பெரிய அரசியல் மெசேஜ்.

3. கூட்டணி வைத்தாலும் நடிகர்கள் வெல்வது இனி கடினம் என்பதை பவன் கல்யானின் பாஜக கூட்டணி தோல்வி காட்டி உள்ளது.

4. ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன்.. லோக்சபா தேர்தலில் அவர் தெற்கு கோவை தொகுதியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் டெபாசிட் இழந்தார். அப்படி இருக்க விஜய் அரசியலுக்கு வருவது சரியான முடிவாக இருக்காது.

How Pawan Kalyan lost in Telangana is a big message for Actor Vijay politics in Tamil Nadu?

4 மாநில தேர்தல்: ராஜஸ்தானில் பாஜக 113 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 69 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 200 இடங்களில் மெஜாரிட்டி பெற 101 இடங்கள் போதும். மத்திய பிரதேசத்தில்., பாஜக 165 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

சத்தீஸ்கரில் ., பாஜக 54 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 64 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. மெஜாரிட்டி பெற அங்கே 90 இடங்களில் 46 இடங்கள் போதும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+