சுனிலை திருப்பி அனுப்பிய கமல்நாத்! அங்கே தொடங்கிய தோல்வி.. காங்கிரஸ் வீழ்ச்சிக்கு இப்படி ஒரு காரணமா?
போபால்; மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவதற்கு முக்கியமான காரணமாக அம்மாநில மூத்த தலைவர்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் 5வ துறையாக அங்கே பாஜக ஆட்சி அமைகிறது. 167 இடங்களில் அங்கே பாஜக முன்னிலை வகிக்கிறது. 62 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 230 இடங்களில் 116ல் வென்றால் அங்கே ஆட்சியை பிடிக்க முடியும்.
இந்த நிலையில்தான் பாஜக மாபெரும் பெரும்பான்மை பெற்று தேர்தலில் முன்னிலை வகிக்கிறது. அங்கே காங்கிரஸ் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இளம் தலைவர்: முக்கியமாக இளம் தலைவர்கள் இல்லாமல் போனது காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஜோதிராதித்ய சிந்தியா போன்ற போன்ற தலைவர்கள் இல்லாமல் போனது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. அரசியல் ரீதியாக கமல்நாத் பெரிய தலைவர்தான். ஆனால் அவரிடம் ஒரு வசீகரம் இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு என்று வலுவான மாநில முகம் கிடையாது. அங்கே மாநில ரீதியாக வலுவாக காங்கிரசை தூக்கி நிறுத்தும் முகம் கிடையாது.
மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம். மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்கது.
( 3 மாநிலங்களில் கிளீன் போல்ட்டான காங்கிரஸ்! கெட்டதில் ஒரு நல்லது.. சந்தோஷத்தில் திமுக! என்ன நடந்தது?)
அதிருப்தி வாக்குகள்: அப்படி இருந்தும் கூட.. அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை கூட வெல்ல முடியாமல் மோசமான தோல்வியை காங்கிரஸ் அங்கே சந்தித்து உள்ளது. அங்கே காங்கிரஸ் பிரச்சாரம் தொடக்கத்தில் சிறப்பாக இருந்தது. ஆனால் போக போக பிரச்சாரம் சறுக்கியது. முக்கியமாக கடைசி 30 நாட்கள் பாஜகவின் சவுகான் நேரடியாக பிரச்சாரத்தை கவனித்தார்.
திருப்பி அனுப்பினார்: தேர்தல் ஆலோசகரும் காங்கிரஸ் நிர்வாகியுமான சுனில் கனகூலுவை திருப்பி அனுப்பியதுதான் அங்கே கமல்நாத் செய்த தவறு என்று கூறப்படுகிறது. அவர் இருந்த வரை தேர்தல் திட்டங்கள் சரியாக தீட்டப்பட்டன. அவர் திருப்பி அனுப்பப்பட்டது காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக பார்க்கப்பட்டது.
கமல் நாத், திக் விஜய் சிங் ஆகியோர் சீனியர்கள் என்பதால் ஈகோவுடன் செயல்பட்டு சுனிலை திருப்பி அனுப்பியதால் அங்கே காங்கிரஸ் பிரச்சாரம் முடங்கியதாக கூறப்படுகிறது.
கர்நாடகா காங்கிரஸ்; முன்னதாக கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற சுனில் காரணமாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த அபார வெற்றிக்கு அவர்களின் முறையான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணம் ஆகும். களத்தில் மேற்கொண்ட பிரச்சாரம், சமூக வலைதள பிரச்சாரம், முறையாக திட்டமிட்டு காய் நகர்த்தியது, பத்திரிகைகளில் முறையாக விளம்பரம் கொடுத்தது என்று காங்கிரஸ் கட்சி பாஜகவை இந்த தேர்தலில் திக்கி திணற வைத்தது

இதற்கெல்லாம் காரணம் அங்கே காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆலோசகராக நியமித்து இருந்த சுனில் கணகோலுதான். ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளை தெரிந்த சுனில் பிரபல அரசியல் ஆலோசகர் ஆவார்.
யார் இவர்?: அரசியல் ஆலோசகராக பல கட்சிகளுக்கு பணியாற்றி வந்தவர்.. காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்ற சென்று அங்கு முழு நேர உறுப்பினர் ஆகிவிட்டார். பிரஷாந்த் கிஷோர் போல் இல்லாமல் சுனிலை ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ பார்க்க முடியாது.
காங்கிரஸின் 2024 தேர்தல் பணிக்குழுவின் முக்கிய ,மாஸ்டார்மைன்ட். மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 39 வயதான சுனில் மிகவும் வித்தியாசமானவர். I-PAC இன் பிரஷாந்த் கிஷோரை போல இல்லாமல் இவர் மிகவும் அமைதியானவர், அரசியல் சார்பு அற்றவர். ஆனால் இந்த முறை காங்கிரஸ் உறுப்பினராகவே சேர்ந்து விட்டார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்த முறை காங்கிரசுக்கு வெற்றியை தேடிக்கொடுத்துள்ள சுனில் ஏற்கனவே தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணிகளை செய்தார். அவர் அங்கே செய்த பணிகள்தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெல்ல காரணமாக இருந்தது. அவரின் பணிகளை நம்பியே ராகுல் மத்திய பிரதேசத்திற்கும் அவரை அனுப்பினார். ஆனால் அவரை மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனது அக்கட்சியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications