Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுவது எப்படி? மருத்துவர் முத்துச் செல்லக் குமார் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுவது எப்படி? இதற்காக நோயாளிகள் தேர்வு செய்யப்படுவது எப்படி என்று பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் உட்பட உலகம் முழுக்க பல பகுதிகளில் கொரோனா பாதிப்பை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் மிக முக்கியமான சிகிச்சை முறையாக பிளாஸ்மா சிகிச்சை பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் கொரோனா சிகிச்சைக்காக பலரும் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வந்துள்ளனர்.

How Plasma Therapy works for Coronavirus patients explains Dr.Muthu Chella Kumar

இப்படி அதிக கவனம் ஈர்த்து இருக்கும் பிளாஸ்மா சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது? இதன் பயன் என்ன? என்பது குறித்து பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது, பிளாஸ்மா சிகிச்சை என்பது 1894ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.ஜெர்மனியை சேர்ந்த எமில் வான் பெரிங் (Emil von Behring) என்பவர் மூலம் இந்த சிகிச்சையை அறிமுகப்படுத்தப்பட்டது. Diphtheria என்று அழைக்கப்படும் தொண்டை அடைப்பான் நோய் அப்போது பலருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டையில் சவ்வு போன்ற அடைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் மூச்சு விட முடியாத நிலை ஏற்படும்.

இதனால் பலர் அப்போது பலியானார்கள்.Corynebacterium diphtheriae எனப்படும் கிருமிகள்தான் இந்த நோயை ஏற்படுத்தும். இந்த நோய்க்குதான் பிளாஸ்மா சிகிச்சையை எமில் மேற்கொண்டார். இந்த Corynebacterium diphtheriae கிருமியை கினி பன்றிகளிடம் இவர் செலுத்தினார். இப்போது அந்த பன்றிகளிடம் அண்டிடாக்சின் எனப்படும் Corynebacterium diphtheriaeக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உடலில் உருவானது.

இந்த ஆண்டிடாக்சின்களை வேறு பன்றிகளுக்கு கொடுத்து அவர் ஆராய்ச்சி செய்தார். இந்த ஆண்டிடாக்சின் பெற்ற பன்றிகள் Corynebacterium diphtheriae மூலம் பாதிக்கப்படவில்லை. அதாவது Corynebacterium diphtheriaeக்கு எதிராக இந்த பன்றிகள் எதிர்ப்பு சக்தியை பெற்றது. இவர்தான் ஆண்டிடாக்சின் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்.

இதுதான் பிளாஸ்மா சிகிச்சையின் தொடக்கம். இதேபோல் 1918ல் இருந்து 1920 வரை பரவிய ஸ்பானிஷ் ப்ளூ, அதன்பின் பரவிய பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், தட்டம்மை, சின்னம்மை, ஆப்ரிக்காவில் வந்த எபோலா, மத்திய கிழக்கு நாடுகளில் வந்த மெர்ஸ் ஆகியவற்றுக்கும் கூட இந்த பிளாஸ்மா சிகிச்சை பயன்ப்படுத்தப்பட்டது.

தற்போது கொரோனாவிற்கும் இதே பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று, அதில் இருந்து குணமடைந்த நபரின் ரத்தத்தை எடுத்து, அதில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து, பின் அந்த பிளாஸ்மாவை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து அவர்களை குணப்படுத்துவதுதான் பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.

பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி புரோட்டீன்கள் மூலம், கொரோனா நோயாளிகள் குணமாகிறார்கள். பிளாஸ்மாவில் இருக்கும் ஆண்டிபாடிகளை நோயாளிகளுக்கு கொடுத்து இந்த சிகிச்சை செய்யப்படும். ஒருவருக்கு ஒரு நோய் தாக்குதல் ஏற்பட்ட சில நாட்களில் உடலில் இரண்டு வகையான எதிர்ப்பு சக்தி ஏற்படும். ஒன்று, cellular immunity இன்னொன்று humoral immunity. இதில் humoral immunityயைதான் ஆண்டிபாடி என்று அழைக்கிறோம்.

உடலில் உருவாகும் இந்த ஆண்டிபாடி உடலில் பல நாட்கள் இருக்கும். இதைதான் நாம் பிளாஸ்மா சிகிச்சைக்கு பயன்படுத்துகிறோம். பிளாஸ்மா சிகிசிச்சையில் ஒருவர் (குணமடைந்தவர்) இந்த ஆண்டிபாடியை தானம் செய்வார், இன்னொருவர் (நோயாளி) அதை பெறுவார். இவர்கள் இருவரின் உடல்நிலையும் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

பிளாஸ்மா தானம் செய்பவர், கொரோனா பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவராக இருக்க வேண்டும். அறிகுறி இல்லாமல் கொரோனா வந்து வீட்டில் சிகிச்சை பெற்றவர்கள் இப்படி பிளாஸ்மா தானம் செய்தால் அதில் பலன் இல்லை. அவர்களுக்கு ஆண்டிபாடி அதிகமாக இருக்காது. இதனால் பிளாஸ்மா தானம் செய்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவராக இருக்க வேண்டும்.

அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நோய் ஏற்பட்ட 1 மாதம் கழித்தே பிளாஸ்மா தானம் செய்ய முடியும் ( மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 14 நாட்கள் கழித்து). இவர்களுக்கு எய்ட்ஸ், காசநோய்,டெங்கு, மலேரியா இருக்க கூடாது. இவர்களின் பிபி தொடங்கி எல்லாம் சோதனையை செய்யப்படும். பிளாஸ்மா கொடுப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இதற்கான விதிமுறைகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதேபோல் பிளாஸ்மாவை பெறும் நபரையும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். மிதமான கொரோனா பாதிப்பு (moderate covid-19 illness) கொண்டவர்களுக்கு இந்த பிளாஸ்மா தரப்படும். நோயாளி பிளாஸ்மாவை பெற்று அதனால் பாதிப்பு அடைய கூடாது. அதனால் கொடுப்பவர், பெறுபவர் என்று இருவரையும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும், என்று பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் மூலம் எப்படி நோயாளி குணமடைவார் என்பது உட்பட கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+