காருக்கு பின்னாடி என்ன? டெட் பாடியா? சென்னை தம்பதி கொலை.. குற்றவாளியை சிக்க வைத்த அந்த ஒரு வீடியோ!
சென்னை: சென்னை மயிலாப்பூரில் தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகள் சில போலீசாருக்கு பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளது.
Recommended Video
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தம்பதியினர் ஸ்ரீகாந்த், அனுராதா. இவர்கள் துவக்காரா மகாலட்சுமி பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக அமெரிக்காவில் தங்கி, அவர்களுடன் இவர்கள் நேரம் செலவிட்டுள்ளனர்.

திரும்பி வந்தனர்
இந்த நிலையில் நேற்று காலை இவர்கள் சென்னை திரும்பிய போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. சென்னைக்கு விமானம் மூலம் வந்தவர்கள். விமான நிலையத்தை விட்டு வெளியேறியதும் கால் செய்து அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் அதன்பின் வீட்டிற்கு போனதை பற்றி இவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள்.. எங்கே பெற்றோர் சரியாக வீடு போய் சேர்ந்தார்களா இல்லையா என்று தெரியாமல் பதற்றத்தில் இருந்துள்ளனர் .

எடுக்கவில்லை
நேரம் செல்ல செல்ல பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அந்த டிரைவருக்கு போன் செய்து பார்த்தால் அவரும் போனை ஆப் செய்து இருந்துள்ளார். மேலும் இரண்டு தம்பதிகளின் போனும் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அந்த தம்பதியினரை கிருஷ்ணா என்ற டிரைவர்தான் பிக் அப் செய்துள்ளார். இவர் நேபாள நாட்டை சேர்ந்தவர். இந்த நிலையில் சந்தேகம் அதிகரிக்கவே உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை
நேற்று மாலையே இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணைகளை செய்தனர். விசாரணையின் அடிப்படையில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, சூலேரிக்காடு பகுதியில் அந்த தம்பதிக்கு பண்ணை வீடு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனே போலீசார் அந்த இடத்திற்கு விரைந்தனர். இன்னொரு பக்கம் டிரைவர் கிருஷ்ணாவின் கார் அந்த வழியாக செல்கிறதா என்றும் சோதனை செய்தனர். சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்கிறது என்றால் டோல்கேட் வழியாகவே செல்ல வேண்டும்.

எப்படி செல்ல வேண்டும்?
இதனால் டோல்கேட் சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில் கிருஷ்ணாவின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு காருக்கு உள்ளே பின் பக்க சீட்டில் இரண்டு பேரின் உடல் இருப்பது போன்ற உருவம் இருந்துள்ளது. இரண்டு பேரும் படுத்திருப்பது போன்ற உருவம் அதில் இருந்துள்ளது. இதனால் கிருஷ்ணா எங்கே அவர்களை கொன்று இருக்கலாமோ என்ற அச்சத்தில் போலீசார் உடனே அந்த பண்ணை வீட்டிற்கு விரைந்தனர்.

பண்ணை வீடு கைது
போலீஸ் வருவார்கள் என்பதை உணர்ந்து கொண்ட டிரைவர் கிருஷ்ணா.. தம்பதியினர் உடலை பண்ணை வீட்டில் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஆந்திர பார்டருக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆந்திராவில் உள்ள ஓங்கோல் பகுதிக்கும் அவர் சென்றுள்ளார். கடைசியில் ஆந்திர போலீசார் உதவியுடன், போலீசார், அவரின் காரை டோல்கேட் சிசிடிவிகளை வைத்து டிராக் செய்து பிடித்தனர். சரியாக 5 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இதையடுத்து போலீசார் கிருஷ்ணாவிடம் விசாரணை செய்தனர்.

நகை பணம்
அதன்படி, அந்த தமபதியினர் பணக்கார தம்பதி என்று தெரியும். மயிலாப்பூரில் அவர்கள் வீட்டிற்கு போன போது பேக்கை தூக்கி தருகிறேன் என்று கூறி உள்ளே சென்றேன். அங்கேயே அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, நகை, பணத்தை எடுத்தேன். பின்னர் பண்ணை வீட்டில் அவர்களின் உடலை புதைக்க எடுத்து சென்றேன் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் கிருஷ்ணாவிற்கு உடந்தையாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications