வருமான வரி விலக்கு வரம்பு உயர்வால் அரசுக்கு லாபம்? இதென்ன கணக்கு? நிதி வல்லுநர்கள் சொல்லும் மேட்டர்!
சென்னை: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
2025- 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையின் கீழ் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாத சம்பளதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

12 லட்சம் வரை வரி விலக்கு
கடந்த 2019-ம் ஆண்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2023-ல் ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது புதிய வருமான வரி விதிப்பு நடைமுறையில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால், நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால், மாத சம்பளதாரர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசுக்கு இழப்பா?
அதேசமயம், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதன் காரணமாக மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த இழப்பு, அரசுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார்கள் நிதி வல்லுநர்கள். வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதால், மிச்சமாகும் பணத்தை மக்கள் தாராளமாக செலவு செய்வார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துவிடும்.
பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன?
மாதத்துக்கு 1 லட்சம் வரை சம்பாதிக்கும் மாதச் சம்பளதாரர்கள் அதிகபட்சமாக ஓராண்டில் ரூ.60,000 வரை சேமிக்க முடியும். ஒருவருக்கு ரூ.10,000 வரை வரி சேமிக்க முடியும் என்றால் அவர் நிச்சயமாக ரூ.8,000 வரை செலவு செய்வார். இதன்மூலம் பல்வேறு வகைகளில் மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துவிடும்.
மேலும், இந்த வரி விலக்கு காரணமாக, மக்கள் செலவழிப்பதும் கூடும். வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்களில் அவர்களின் செலவுகள் இருக்கக்கூடும். அவற்றிற்கான வரிகள் அதிகம் என்பதால், அவை மூலம் மத்திய அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துவிடும், எனவே, அரசுக்கு இந்த வரி விலக்கால் பெரிய அளவில் இழப்பு ஏற்படாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
நிதி அமைச்சர் நிர்மலா சொன்னது
இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பேசியுள்ளார். வரி விலக்கு முன்பு ரூ.2.2 லட்சமாக இருந்தது, பின்னர் 2014-ல் ரூ.2.5 லட்சமாக மாறியது. 2019-ல் ரூ.5 லட்சமாகவும், பின்னர் ரூ.7 லட்சமாகவும், தற்போது ரூ.12 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
அதன் மூலம், ஒருவர் மாதம் சராசரியாக ரூ.1 லட்சம் சம்பாதித்தால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என அரசு கருதுகிறது. வருமான வரி அடுக்குகளை மறுசீரமைப்பதன் மூலம், சேமிக்கப்படும் பணம், நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவை மீண்டும் பொருளாதாரத்தில் சுழற்சியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
பாக்கெட்டில் அதிக பணம்
இப்போது ரூ. 8 லட்சம் சம்பாதிக்கும் ஒருவரின் பாக்கெட்டில் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் அதிகமாக உள்ளது. 2014ல் ஒருவர் 8 லட்சம் சம்பாதித்திருந்தால் வரி ரூ.1 லட்சம்; இப்போது, பூஜ்ஜியம். ரூ. 12 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர், 2014ல், ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும், ஆனால் இப்போது ஒரு ரூபாய் கூட செலுத்தத் தேவையில்லை. எனவே அவர்களின் பாக்கெட்டில் ரூ.2 லட்சம் அதிகம் இருக்கும். இதன் மூலம் பணப் புழக்கம் அதிகரிக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூர்தர்ஷனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications