மெட்ரோவை விடுங்க RRTS ரயில் வருது.. சென்னையில் இங்கே நிலம் வாங்கினால்.. கோடிகளில் லாபம்தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வர RRTS ரயில்கள் காரணமாக பல இடங்களில் நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து RRTS ரயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை கண்டறிய விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்காக ஆறு ஏலதாரர்கள் முன் வந்துள்ளனர். இதில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் டிபிஆர் தயாரிக்கும் பணிகள் விடப்படும்.

தமிழக அரசின் கடந்த பட்ஜெட் அறிவிப்பின் படி ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே ரயில் அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.

🔹சென்னை - திண்டிவனம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.
🔹கோயம்புத்தூர் - சேலம் ரூட்டில் RRTS ரயில்கள் அமைக்கப்படும்.

How RRTS trains in Chennai will change the real estate value multi fold

RRTS (Regional Rapid Transit System) என்பது விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை ஆகும். RRTS என்பது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான திட்டமாகும். இது நகரங்கள் மற்றும் புறநகரங்களை இணைக்கும் வேக ரயில் போக்குவரத்து அமைப்பாகும். டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், மெட்ரோ ரயில்களை விட வேகமாகவும், சாதாரண ரயில்களை விட நவீனமாகவும் இருக்கும்.

ரூட் என்ன?

1. சென்னை-செங்கல்பட்டு-திண்டிவனம்-வில்லுபுரம் வழித்தடம் (167 கி.மீ)

இந்த வழித்தடம் சென்னையை விழுப்புரத்துடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் வழியாக செல்கிறது:

சென்னை - தொடக்கப் புள்ளி, சென்னை சென்ட்ரல் அல்லது எழும்பூரிலிருந்து இருக்கலாம்.

தாம்பரம்

செங்கல்பட்டு

திண்டிவனம்

விழுப்புரம் கடைசி ஸ்டேஷன் அமைக்கப்படும்

இந்த வழித்தடம் தெற்கு சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து பயணிகளுக்கு RRTS சேவை வழங்குவதாகியும் தெற்கு மாவட்டங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் வழித்தடம் (140 கி.மீ)

இந்த வழித்தடம் சென்னையை வேலூருடன் இணைப்பதில் கவனம் செலுத்துகிறது, பின்வரும் வழியாகச் செல்கிறது:

சென்னை: தொடக்கப் புள்ளி.

பூந்தமல்லி

ஸ்ரீபெரும்புதூர்

சுங்குவார்சத்திரம்

பரந்தூர்

காஞ்சிபுரம்

அரக்கோணம்

ராணிப்பேட்டை

வேலூர் கடைசி ஸ்டேஷன்


RRTSயின் முக்கிய அம்சங்கள்

அதிவேக ரயில்: மணிக்கு 160-180 கிமீ வேகத்தில் இயங்கும்.
வசதிகள்: ஏசி கோச்சுகள், Wi-Fi, ஆட்டோமெட்டிக் கதவுகள்.
வேகமான பயணம்: மெட்ரோவிற்கு மாற்றாக நீண்ட தூரப் பயணிகளுக்கு உகந்தது.
சுற்றுச்சூழல் : மின்சாரத்தில் இயங்கும், குறைந்த கார்பன் அடையாளம்.

டெல்லி-NCR முதல் கட்டம்: டெல்லி-மேரட், டெல்லி-அல்வார், டெல்லி-பானிபத் ஆகிய வழிகளில் முதலில் செயல்படுத்தப்படுகிறது.

வடஇந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு வரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும். இதற்க்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.

நிலத்தின் மதிப்பு உயரும்:

சென்னையில் வர RRTS ரயில்கள் காரணமாக பல இடங்களில் நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாம்பரம் நிலத்தின் மதிப்பு 20% உயரும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

செங்கல்பட்டு நிலத்தின் மதிப்பு 30% உயரும்

திண்டிவனம் நிலத்தின் மதிப்பு 45% உயரும்

விழுப்புரம் நிலத்தின் மதிப்பு 55% உயரும்

பூந்தமல்லி நிலத்தின் மதிப்பு 35% உயரும்

ஸ்ரீபெரும்புதூர் நிலத்தின் மதிப்பு 45% உயரும்

சுங்குவார்சத்திரம் நிலத்தின் மதிப்பு 40% உயரும்

பரந்தூர் நிலத்தின் மதிப்பு 50% உயரும்

காஞ்சிபுரம் நிலத்தின் மதிப்பு 70% உயரும்

அரக்கோணம் நிலத்தின் மதிப்பு 60% உயரும்

ராணிப்பேட்டை நிலத்தின் மதிப்பு 45% உயரும்

வேலூர் கடைசி ஸ்டேஷன் நிலத்தின் மதிப்பு 55% உயரும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+