தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு தூய்மை பணியாளர் பலி.. பின்னணி என்ன?
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தூய்மை பணியாளருக்கு மற்றொரு தொழிலாளியிடமிருந்து கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
நோய் கட்டுப்பாட்டு பகுதியான ராயபுரத்தில் துப்புரவு பணியை 58 வயது நபர் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி பணியாளர் ஆவார். இவர் ஏழுகிணறு பகுதியில் கொண்டிதோப்பை சேர்ந்தவர்.
இவருக்கு நேற்று முன் தினம் முதல் அதிகமான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து இவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுத்திணறல்
இவர் நேற்று இரவு வரை எந்த வித பாதிப்பும் இல்லாமல் உடல்நிலையும் சீராக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார்.

விசாரணை
அவர் 10 ஆண்டுகளாக நீரிழிவு நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. வேறு ஒரு துப்புரவு பணியாளரிடம் இருந்து இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

துப்புரவு தொழிலாளி
கொரோனாவுக்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது முதல் முறையாக தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் லேசான காய்ச்சல் காரணமாக ஒரு துப்புரவு தொழிலாளி இறந்தார், ஆனால் அவருக்கு கொரோனா இல்லை.

கருஞ்சிகப்பு மண்டலம்
சென்னையில் ராயபுரத்தில்தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகியன கருஞ்சிகப்பு மண்டலமானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications