நாடு முழுக்க உள்ள ஹவுஸ் ஓனர்களுக்கு குஷியோ குஷி.. நிர்மலா சீதாராமனின் செம அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
சென்னை: நாடு முழுக்க உள்ள ஹவுஸ் ஓனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான தனது பட்ஜெட் உரையில், வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார்.

பட்ஜெட் ஆவணத்தின்படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை.
இதனால் சிறிய வீடுகளில் வாடகை விடுபவர்கள்.. குறைந்த வாடகைக்கு வீடுகளை விடுபவர்கள் பயன் அடைவார்கள். அதோடு பலர் புதிதாக வாடகைக்கு வீடு விடவும் வழிவகுக்கும். வாடகை வீடுகளின் எண்ணிக்கை இதனால் உயரும். நேற்று பட்ஜெட்டில் வெளியான இந்த அறிவிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்:
நேற்று இது போல பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
நாடு முழுக்க இவி பேட்டரிகள் தயாரிக்க சலுகைகள் வழங்கப்படும், லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து செய்யப்படும், மின்சார வாகன மற்றும் மொபைல் போன்களுக்காக தயாரிக்கப்படும் பேட்டரிகளுக்கு உற்பத்தி வரி சலுகை வழங்கப்படும்.
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும். Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும். இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். விவசாயிகளுக்கான 'கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும். . தன் தன்யா கிருஷி என்கிற திட்டம் அறிவிக்கப்படுகிறது
குறைந்த உற்பத்தி திறன் கொண்ட 100 மாவட்டங்கள் இந்த திட்டத்தின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. 2047க்குள் 10 ஜிகாவாட் அணுசக்தி உலைகளை உருவாக்குவோம், அணுசக்தி சட்டத்தில் இதற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்படும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5 சிறிய அணுஉலைகள் 2033க்குள் செயல்படத் தொடங்கும் .
பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும். சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யப்படும். பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கபடும், பாட்னா விமான நிலையம் விரிவு செய்யப்படும்.
இளைஞர்கள் முன்னேற்றம், விவசாயம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிப்பு; வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிம வளம், நிதி மேலாண்மை, மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைப்பு செய்யப்படும். பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும், உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications