ஓவர் நைட்டில் கோடீஸ்வரன் ஆவது ரொம்பவே ஈஸி.. கஷ்டம் எல்லாம் இல்லை.. இதை பண்ணுங்க போதும்! 5 டிப்ஸ்
சென்னை: இந்த காலத்தில் இளைஞர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை என்ற புலம்பலை நம்மால் பார்க்க முடியும். இந்தச் சிக்கலைத் தவிர்த்து எப்படி நாம் சேமிக்கலாம் என்பதை இதில் நாம் பார்க்கலாம்.
இப்போதுள்ள இளைஞர்கள் பட்டப்படிப்பு வரை படித்துள்ளதால் அவர்களின் சம்பளம் அதிகமாகவே இருக்கிறது. காசு கையில் அதிகமாகப் புழங்குவதால் அவர்களின் வாழ்க்கை முறையும் மாறுகிறது.

வருமானம் எவ்வளவு அதிகமாகக் கூட சேமிப்பைச் செய்ய முடிவதில்லை என்று பலர் புலம்புவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். அதற்கு முக்கிய காரணமாகவே அவர்கள் செய்யும் சில முக்கிய தவறுகள் தான். நாம் தேவையில்லாத செலவுகளைக் குறைத்துச் சேமிப்பை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம்.
சேமிப்பு: முதல் விஷயம் தேவையில்லாத பொருட்களை எப்போதும் வாங்கவே கூடாது. ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளங்கள். இன்று நீங்கள் தேவையில்லாத ஒரு விஷயத்தை வாங்குகிறார்கள் என்றால் நாளை உங்களுக்குத் தேவையான ஒரு பொருளை விற்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு பல முறை யோசிக்க வேண்டும். ஒரு பொருள் ரொம்ப பிடித்துப் போனாலும், சில நாட்கள் யோசித்து இது நமக்குத் தேவை தானா என்பதை நன்கு யோசித்து வாங்க வேண்டும்.
அடுத்து கையில் இருக்கும் பணத்தைத் தாண்டி ஒரு ரூபாய் கூடக் கூடுதலாகச் செலவழிக்க வேண்டாம். கடன் வாங்கி நுகர்வது என்பது மிகப் பெரிய ஆபத்தில் தான் முடியும். எனவே, தனிப்பட்ட செலவுகளுக்காக ஒரு ரூபாய் கூட செலவழிக்க வேண்டாம். உங்கள் விரும்பிய பொருளை வாங்க முடியவில்லை என்றால் அல்லது தேவையான விடுமுறைக்குச் செல்ல முடியவில்லை என்றால் கடன் வாங்கி அதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பொறுமையாகக் காசை சேமித்து வைத்து அதை வாங்கலாம். கடன் வாங்கவே கூடாது.
கிரெடிட் கார்டு: அடுத்து முடிந்தவரை கிரெடிட் கார்டு பயன்பாட்டைக் குறைவாகவே வைத்திருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் நமக்கு நல்ல விஷயங்களும் இருக்கிறது. ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் கிரெடிட் கார்டு நம்மை மிகப் பெரிய ஆபத்திலும் தள்ளும். எனவே, முடிந்தவரை கிரெடிட் கார்டை குறைவாகவே பயன்படுத்துங்கள். அப்போது தான் கிரெடிட் கார்டு வட்டியில் இருந்து தப்பிக்க முடியும்.
அதேபோல no-spend சேலஞ்சை முயலுங்கள். அதாவது ஒரு வாரத்திற்கு எந்தவொரு அத்தியாவசியம் இல்லாத செலவுகளையும் செய்யாதீர்கள். வெளியே சென்று சாப்பிடுவது, படத்திற்குச் செல்வது என அநாவசியமான செலவுகள் அனைத்தையும் கட் செய்யுங்கள். அந்த குறிப்பிட்ட காலத்தில் உங்களால் பெருந்தொகையை நிச்சயம் சேமிக்க முடியும். எனவே, இதுபோலவும் சேமிக்கலாம் என்பதால் இதுபோல நோ ஸ்பெண்ட் சேலஞ்களை பாலோ செய்யுங்கள்.

ரொம்ப முக்கியம்: செலவுகள் அனைத்தையும் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்.. உங்கள் செலவிலேயே சேமிப்பிற்கான நிதியையும் ஒதுக்குங்கள்.. அப்போதுதான் என்ன நடந்தாலும் தவறாமல் சேமிக்கும் பழக்கம் உருவாகும். என்ன தான் நாம் செலவுகளைக் குறைத்தாலும் சேமிப்பை ஆரம்பிக்கவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை. எனவே, இதை நாம் அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
பெருந்தொகையைத் தான் சேமிக்க வேண்டும் என்று இல்லை. 500 அல்லது 1000 ரூபாயைக் கூட சேமிக்கத் தொடங்கலாம். தங்கம், பங்குச்சந்தை என முதலீடு செய்யப் பல விஷயங்கள் இருக்கிறது. உங்களுக்குச் சரியான விஷயத்தைத் தேர்வு செய்து அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள்.
இது பொதுவான டிப்ஸ் மட்டுமே.. நிதி சார்ந்த ஆலோசனை இல்லை. எனவே, முதலீடு செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications