30 முதல் 40 சதவீதம் தள்ளுபடியில் வீடுகளை வாங்குவது எப்படி? வங்கிகளே தரும் சூப்பர் வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிறைய பேருக்கு குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் வாங்க வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் எங்கு உள்ளது.. எப்படி வாங்குவது? யாரை அணுக வேண்டும் என்று தெரியாது. எங்காவது ஒரு விளம்பரத்தை பார்த்து ஏமாந்து வீடு வாங்குவார்கள்.. அதேநேரம் ஒரு சிலர் வங்கிகள் மூலமே 30 முதல் 40 சதவீதம் தள்ளுபடியில் வீடுகளை வாங்குகிறார்கள். கடனை கட்ட முடியாமல் ஏலம் விடப்படும் வீடுகளை மிக குறைந்த விலைக்கு வாங்க முடியும். அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

வீடு வாங்க விரும்புவோர் பொதுவாக பில்டர்கள் கட்டி விற்பனை செய்யும் வீடுகளை தான் வாங்குவார்கள். அந்த வீடுகளின் விலை மிக அதிகமாக இருக்கும். ஆனால் கடனில் உள்ள வீடுகளை வாங்கினால் மிக குறைந்த விலைக்கு வாங்கிவிட முடியும். சில வீடுகளை 30 முதல் 40 சதவீதம் அளவிற்கு கூட வங்கிகள் தள்ளுபடியில் வீடுகளை தருகின்றன. கடனில் உள்ள வீடுகளை குறைந்த விலையில் ஏலம் எடுக்க முடியும். இத்தனைக்கும் வங்கிகள் ஏலம் விடுவதை வெளிப்படையாகவே செய்கின்றன.

How to buy houses at a 30 to 40 percent discount Banks offer a super opportunity

சென்னையில் வீடுகள்

நம்மூரில் பலருக்கும் தெரிவது இல்லை. தெரிந்தவர்கள் வாங்கி கொள்கிறார்கள்.சிலர் அத்தகைய வீடுகளை வாங்கி, மாற்றிவிட்டே, கோடிகளை சம்பாதிக்கவும் செய்கிறார்கள்.. வெறும் ஒரு லட்சம் கட்ட முடியாமல் வீடுகளை விட்டு வெளியேறி அந்த வீட்டை விட்டு வாடகைக்கு போனவர்கள் சென்னையிலேயே அதிகம். அவர்கள் இப்போது நிச்சயம் யோசிப்பார்கள்.. அய்யோ நமது வீட்டை விட்டுவிட்டோமே என்று.. ஏனெனில் சென்னையில் எல்லாம் நிலத்தின் மதிப்பே கோடிகளில் போகிறது. அதனால் வீடுகள் குறைந்த விலைக்கு விற்றவர்கள் இன்றும் கவலைப்படுவார்கள்.

40 சதவீதம் தள்ளுபடியில் வீடுகள்

சரி விஷயத்திற்கு வருவோம்.. வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டியவர்கள், கடனை கட்ட முடியாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அதாவது வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கடனை கட்ட முடியாவிட்டால் , அதில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த வீட்டை வங்கிகள் ஏலம் விட்டு தங்கள் கடனை வசூலித்துக் கொள்கின்றன. அதேபோல் தான் அடமானம் வைத்த வீடுகளையும், வங்கிகள் ஏலம் விடுகின்றன. தங்களது கடன் தொகையை வசூலிக்க ஏலம் விடும் போது, அந்த விலை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லை என்றால், குறைந்த விலைக்கு வங்கிகள் வீடுகளை தர முன் வருகின்றன.அதில் எவ்வளவு அசலை வாங்க முடியுமோ, வந்த விலைக்குதள்ளிவிடுகின்றன. அப்படி தரப்படும் வீடுகளின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாகவே இருக்கும்.

எப்படி வாங்குவது

இப்படிப்பட்ட வீடுகளை வங்கிகளின் இணையதளங்களில் வாங்க முடியும். அதேபோல் எல்லா வங்கிகளிலும் ஏலம் விடப்படும் வீடுகளை https://ibapi.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அதில் எந்த வங்கியின் வீடுகளையும், எந்த ஊரில் உள்ள வீடுகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கி கொள்ள முடியும். அந்தஇணையதளத்தில் முதலில் லாக் இன் செய்து உள்ளே செல்ல வேண்டும். பின்னர் பிராப்பர்டியை செலக்ட் செய்ய வேண்டும். அதில் ஏரியா, என்ன மாதிரியான வீடு வேண்டும் என்று தேடலாம். இறுதியாக வீடுகளை 30 முதல் 40 சதவீதம் அளவிற்கு குறைந்த விலையில் வீடுகளை வாங்க முடியும். சில வீடுகளை நம்ப முடியாத அளவிற்கு கூட வங்கிகள்நமக்கு தரக்கூடும். இப்படி வீடு வாங்கினால் நிறைய சேமிக்க முடியும்.'

வங்கி ஊழியர்கள் ட்விஸ்ட்

அதேநேரம் வங்கி ஊழியர்கள் நண்பர்கள், உறவினர்களைப் பயன்படுத்தி நல்ல சொத்துக்களை அவர்களே எடுத்துக்கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கின்றன. அதேநேரம் சில நேரங்களில் மோசமான சொத்துக்கள் , யாரும் வாங்க முன்வராத சொத்துக்களை வந்த விலைக்கு விற்பதையும் வங்கிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+